twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நானும் ஒருநாள் தேசிய விருது வாங்குவேன்.. ட்ரோல் மீமால் காண்டான மாஸ்டர் நடிகர் சபதம்!

    |

    சென்னை: மாஸ்டர் படத்தில் நடித்ததற்காக நடிகர் சாந்தனுவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது என எடிட் செய்யப்பட்ட ட்ரோல் மீமால் நடிகர் சாந்தனு அப்செட் ஆகி உள்ளார்.

    Recommended Video

    TWEET பாத்துட்டு LOKESH CALL பண்ணாரு |ACTOR SHANTHANU CHAT| FILMIBEAT TAMIL

    67வது தேசிய விருதுகள் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷுக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது விஜய்சேதுபதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்! காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!

    தேசிய விருது அறிவிப்புக்கு பின்னர் ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் மற்ற நடிகர்களை சீண்டும் விதமாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

    பாக்கியராஜின் மகன்

    பாக்கியராஜின் மகன்

    இந்திய சினிமாவின் பிரபல கதாசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட இயக்குநர் பாக்கியராஜின் மகன் தான் சாந்தனு என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். வேட்டிய மடிச்சுக் கட்டு படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாந்தனுவுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

    சக்கரக்கட்டி

    சக்கரக்கட்டி

    சக்கரக்கட்டி படத்தில் ஹீரோவாக கடந்த 2008ம் ஆண்டு அறிமுகமானார். அந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். டாக்ஸி டாக்ஸி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பின்னர், ஏஞ்சல் ஜான் எனும் மலையாள படத்திலும் நடித்தார். மறுபடியும் தமிழில் சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    ஓடவில்லை

    ஓடவில்லை

    வாரிசு நடிகராக திரைத் துறைக்குள் நுழைந்த நடிகர் சாந்தனு நடித்த பல படங்கள் பெரிதாக ஓடவில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், அவருக்கென ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் வெளியான வானம் கொட்டட்டும், மாஸ்டர், பாவக் கதைகள் என வெர்ஷன் 2.0 வாக மாறி உள்ளார் சாந்தனு.

    தங்கம்

    தங்கம்

    நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜியில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் கதையில் தங்கம் கதாபாத்திரத்திலேயே சாந்தனு நடித்திருந்தார். சத்தாராக நடித்த காளிதாஸும் இவரும் நல்லாவே நடிப்பில் ஸ்கோர் செய்தனர். நடிகர் சாந்தனுவுக்கு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் மத்தியில் பாராட்டுக்களை இந்த தங்கம் வாங்கித் தந்தது.

    தேசிய விருது ட்ரோல்

    தேசிய விருது ட்ரோல்

    இந்நிலையில், தற்போது மாஸ்டர் படத்தில் நடித்ததற்காக வரும் 69வது தேசிய விருது அறிவிப்பில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்படுவதாக எடிட் செய்யப்பட்ட மீம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த ட்வீட்டை ஷேர் செய்துள்ள சாந்தனு அப்செட் ஆகி பதிவிட்டுள்ள ட்வீட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    கல்லடிக்கு நன்றி

    கல்லடிக்கு நன்றி

    ஒருவரை ட்ரோல் செய்வதன் மூலம் கிடைக்கும் சிறிய சந்தோஷத்திற்காக இப்படி செய்றீங்க, இது போன்ற ட்ரோல்களால் ரொம்பவே டயார்ட் ஆகிட்டேன். நீங்கள் என் மீது வீசும் கற்கலுக்கு நன்றி. அது நிச்சயம் பிரபஞ்சத்தில் ஒரு வைப்ரேஷனை எழுப்ப தெரிந்தோ அல்லது தெரியாமலோ உதவும் எனக் கூறியுள்ளார்.

    ஒரு நாள் நடக்கும்

    ஒரு நாள் நடக்கும்

    மேலும், நீங்களே சொல்லீட்டிங்க, நடக்காம போயிடுமா? இதுவும் ஒரு நாள் கண்டிப்பா நடக்கும் என ரொம்ப பாசிட்டிவ்வாக அந்த ட்ரோல் மீமை க்ரியேட் பண்ண நபருக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் சாந்தனு, பார்கவ் கதாபாத்திரம் தனக்கு பிடித்த ஒன்று என்றும் கூறியுள்ள ட்வீட் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

    English summary
    Master actor Shanthanu’s befitting reply to the viral National Award troll meme about him. He also says, one day it will also happen in his tweet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X