என்னவேனா பேசட்டும்.. அவர் திருந்துற மனுஷன் இல்லை.. பயில்வானை வச்சு செய்த சாந்தனு!
சென்னை : பயில்வான் ரங்கநாதன் திருந்துற மனுஷன் இல்லை, அவரைப்பற்றி பேசுவதே வேஸ்ட் என்று நடிகர் சாந்தனு கடுமையாக பேசியுள்ளார்.
விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இராவண கோட்டம்.
இப்படம் வருகிற மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இராவண கோட்டம் : நடிகர் சாந்தானு கதாநாயகனாக நடிக்கும் இராவண கோட்டம் படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
வம்பு இழுத்த பயில்வான் : இராவண கோட்டம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன், இயக்குநர் பாக்யராஜ் படவிழாவில் கலந்து கொள்ளாததற்கு என்ன காரணம் என்று கேட்டார் குதர்க்கமாக ஒரு கேள்வியை பயில்வான் கேட்டார். இதற்கு பதில் அளித்த, சாந்தனு இந்த இராவண கோட்டம் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் அவர் வரவில்லை என்றார். மேலும், இதைப்பற்றி கேட்டு அந்த செய்தியை நீங்கள் சர்ச்சையாக்கினால், அதுவும் இந்த படத்திற்கு ப்ரோமோஷனாகத்தான் இருக்கும் என்றார்.
சம்பாதிக்க பேசுகிறார் : இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சாந்தனு, பயில்வான் ரங்கநாதன் என்னை பற்றிக்கூடத்தான் பேசியிருக்கிறார். அவர் பேச்சுக்கு ரெஸ்பான்ஸ் கொடுக்க கொடுக்கத்தான் அவர் ஓவரா பேசுகிறார். அவர் எதுக்கு மற்றவர்களைப்பற்றி பேசுகிறார் என்றால், வீயூஸிற்காக பேசுகிறார். எவ்வளவு வீயூஸ் வருகிறதோ அவ்வளவு அதிகமாக சம்பாதிக்கலாம் அதற்காகத்தான் அப்படி பேசுகிறார்.

சண்டை போட முடியாது : என்னை பற்றி பேசுவதால் அவருக்கு வருமானம் வருகிறது என்றால், நன்றாக சம்பாதிக்கட்டும், அதற்காக இறங்கிப்போய் அவருடன் என்னால் சண்டை போட முடியாது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதே தப்பு அப்படி பேசினால் தான் அவருக்கு வீயூஸ் வருகிறது என்பதால் அவர் அப்படி பேசுகிறார். பயில்வான் பேசுவதை மற்றவர்கள் பார்த்து வீயூசை அதிகரிப்பதால் தான் அவர் தொடர்ந்து இதுபோன்று பேசிவருகிறார். முதலில் அவர் வீடியோவை மக்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டும்.
அவரை திருத்த முடியாது : பயில்வான் ரங்கநாதனை யாராலும் திருத்த முடியாது, சொல்லி திருந்துவதாக இருந்தால் இந்நேரம் நிறுத்தி இருப்பார். எவ்வளவு பேர் சொல்லியும் அவர் திருந்தவே இல்லை, திருந்தாத ஜென்மத்திடம் சொல்வதில் ஒரு பயனும் இல்லை என்று நடிகர் சாந்தனு மிகவும் கோபத்துடன் பேசினார்.


Click it and Unblock the Notifications