லோகேஷுக்கு நான் காரண்டீ மற்றும் வாரண்டீ தருகிரேன்
Recommended Video
தற்போது தளபதி 64 படம் மிக மிக விறுவிறுப்பான முறைல தயாரிப்பு நடந்துட்டு இருக்கு .இந்த படம் தற்போது டெல்லில படமாக்கபட்டு வந்துட்டு இருக்கு.இந்த படத்தில் தளபதி விஜய் ,விஜய் சேதுபதி ,மாளவிகா மோகனன்,சாந்தனு,ஆன்டனி வர்கீஸ்,ஆன்ட்ரியா, ஶ்ரீமன்,சஞ்சீவ்,பிரேம் சேத்தன் ,அழகம் பெருமாள் ,சுனீல் ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர் ,மேலும் படத்தில் 96 பட நடிகையான கௌரி கிஷானும் நடிக்கிறார் .
இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் மற்றும் கைதி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குகிறார். கடந்த தீபாவளிக்கு பிகில் மற்றும் கைதி படங்கள் வெளியாகின .இவ்விரண்டும் படமும் மக்களிடையே நல்ல வெற்றியை பதிவு செய்திருந்தாலும் தமிழ்நாட்டில் 200 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யபட்ட கைதி படம் இரண்டாவது வாரத்திற்கு பிறகு 350 திரையரங்குகளில் திரையிடப்பட்டது ,இது லோகேஷ் கனகராஜிற்க்கு கிடைத்த தனிபெரும் வெற்றியாக பாரக்கபடுகிறது .

மாநகரம் மற்றும் கைதி இவ்விரண்டு படங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது அந்த ஒற்றுமை தற்போது தளபதி 64 படத்திற்க்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .அது என்னவென்றால் கதாபாத்திரங்கள் தான் ,ஆம் மாநகரம் மற்றும் கைதி படங்களிலில் பல சம்மந்தம் இல்லாத கதாபாத்திரங்கள் சந்தித்து வேறு வேறு பிரச்சனைகள் நடக்கும் அந்த சூலழில் கதை நகரும் .இதே போல தளபதி 64 படத்திலும் எக்கசக்க கதாபாத்திரங்கள் தேர்வாகி உள்ளனர் .இதை வைத்து பார்கையில் கைதி மற்றும் மாநகரம் படங்களை போல தளபதி 64 படம் இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.
தற்போது படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாந்தனு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்த ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி 'கீப் காம் அன்ட டிரஸ்ட் லோகேஷ்' என்று கூறி இயக்குனர் லோகேஷ் மேல் நம்பிக்கை வையுங்கள் என்று கூறியுள்ளார் .
தளபதி விஜயின் தீவிர ரசிகரான சாந்தனு முதல்முதலாக தளபதி விஜயுடன் இனைந்து நடிக்கிறார் . பல மேடைகளிலும் பல இடங்களிலும் தன்னை தளபதி ரசிகர் என்றே காட்டிகொண்டுள்ளார் நடிகர் சாந்தனு .முதல்முதலாக விஜயுடன் நடித்து வருவது
தனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறிவந்த சாந்தனு தற்போது இதையும் கூறியுள்ளார்.

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனி படத்தில் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன .அது எந்த அளவுக்கு உன்மை என்பதை காத்திருந்து பார்போம் .இல்லை என்று மகிழ் திட்டவட்டமாக சொன்னாலும் இன்னும் சில கிசுகிசுக்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications











