சாந்தனுவுடன் பிரேக்அப்.. 8 ஆண்டுகளாக பிரிந்து இருந்தேன்..பல ஆண்டு ரகசியத்தை உடைத்த கிகி!

சென்னை: சாந்தனுவை பிரேக் அப் செய்துவிட்டு 8 ஆண்டுகள் பிரிந்து இருந்தேன் என்று கிகி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முதல் படத்திலே கவனம் பெற்று தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராய் இருக்கிறார் நடிகர் சாந்தனு பாக்யராஜ்.

தன்னுடைய விடாமுயற்சியால் திரைத்துறையில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

shanthanu bhagyaraj wife Kikis shares her breakup stories

ராணுவ கோட்டம்: நடிகர் சாந்தனு பாக்யராஜின் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் இராவண கோட்டம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சீமைகருவேல மரத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து தெளிவாக கூறப்பட்டது. மே மாதம் இத்திரைப்படம் வெளியாகி ஓரளவிற்கு மக்களிடம் ரீச் ஆனது.

பிரேக் ஆப்: இந்நிலையில், சாந்தனு தனது மனைவி கிகியுடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இருவரும் காதலித்த போது நடந்த சுவாரஸ்யமான தருணங்களை பகிர்ந்து கொண்டனர். அதில் இருவருக்கும் இடையே நடந்த காதல் முறிவு குறித்து சாந்தனு மனம் திறந்து பேசினார். ரெண்டுதடவ லவ் பண்ணி, டேட்டிங்க் அப்பறம் பிரேக் ஆப் பண்ணி.. அப்பறம் 8 வருஷம் கழிச்சு தான் திரும்பவும் சேர்ந்தோம்.. அப்போ லவ் பண்ணும்போது சின்ன சின்ன விஷயத்துக்கு சண்டை போட்டுட்டு இருப்போம் என்றார்.

கிகி பேட்டி: இதையடுத்து பேசிய கிகி, நானும் சாந்தனுவும் காதலித்து கொண்டிருக்கும் பொழுது, என் தோழி ஒருவர் அவர் வேறொரு பெண்ணுடன் காஃபி ஷாப்பில் இருப்பதாக தொலைபேசியில் கூறினார்.உடனே நான் சாந்தனுக்கு தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய்..? என்று கேட்டேன். அவர் தன்னுடைய அப்பாவுடன் இருப்பதாக பொய் சொல்லிவிட்டார்.

மீண்டும் சேர்ந்தோம்: இதனால் இருவரும் பிரிந்து விடலாம் என்று முடிவு எடுத்து விட்டு 8 ஆண்டுகள் பிரிந்து இருந்தோம். அதன் பிறகு மேடை நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சேர்ந்து நடனம் ஆட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு தான் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என்று தங்களது பிரேக் அப் குறித்து மனம் திறந்து பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X