பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறாரா சாந்தனு.. வைரலாகும் தகவல்.. மெளனம் கலைத்த நடிகர்!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் சாந்தனு நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Recommended Video
அமரர் கல்கியின் புனைவு நாவலான காலத்தை வென்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கி வருகிறார்.
தாய்லாந்து நாட்டில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், லாக்டவுன் காரணமாக அந்த படத்தின் ஷூட்டிங்கும் மற்ற பட ஷூட்டிங்கை போல நிறுத்தி வைக்கபட்டு இருக்கிறது.

வலிமையான கதாபாத்திரங்கள்
ராஜ ராஜ சோழனின் சரித்திர புனைவு நாவலான பொன்னியின் செல்வன் புத்தகமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த ஒன்று. அந்த நாவலில் பொன்னியின் செல்வன், சுந்தர சோழ மகராஜா, ஆதித்த கரிகாலன், குந்தவை, நந்தினி, வந்தியத்தேவன், மந்தாகினி, பெரிய பழுவேட்டரையர், தேவராளன் என பல வலிமை வாய்ந்த கதை மாந்தர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நட்சத்திர பட்டாளம்
அந்த கதாபாத்திரங்களுக்கு தீனி போடும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறது. ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, லால், விக்ரம் பிரபு, பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வனில் சாந்தனு
இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் இந்த ஆண்டு வெளியான வானம் கொட்டட்டும் படத்தில் நடிகர் சாந்தனு பாக்கியராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்த படத்தில் நடித்துள்ள சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்டோர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் நிலையில், சாந்தனுவும் பொன்னியின் செல்வனில் நடிக்கப் போவதாக சில நாட்களாக தகவல்கள் வைரலாகி வருகின்றன

மணிரத்னத்துக்கு புடிச்சு போச்சு
இந்நிலையில், வைரலாகும் அந்த தகவல் குறித்து சமீபத்தில் பேட்டியளித்திருந்த நடிகர் சாந்தனு, வானம் கொட்டட்டும் படத்தில் தனது நடிப்பை பார்த்த மணிரத்னம் சாருக்கு ரொம்ப புடிச்சு போச்சு என இயக்குநர் தனா தன்னிடம் கூறியதையும், பொன்னியின் செல்வனில் ஒரு கதாபாத்திரத்தில் தன்னை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் கூறியிருந்ததை நினைவுப்படுத்தினார் சாந்தனு.

நடிக்கவில்லை
தொடர்ந்து பேசிய நடிகர் சாந்தனு, வயது வித்தியாசம் காரணமாக அந்த கதாபாத்திரத்தில் தன்னை நடிக்க வைக்க முடியாத சூழல் அவருக்கு ஏற்பட்டதாகவும், அதனால், அந்த பேச்சு அங்கேயே நின்று போனது என்றார். மேலும், மணி சாருக்கு என் நடிப்பு பிடித்து போனதே பெரிய விசயம். எதிர்காலத்தில் அவர் அழைத்தால் ஓடி சென்று நடிப்பேன் எனக் சாந்தனு கூறி இருக்கிறார்.

கைவசம்
இந்த லாக்டவுன் நேரத்தில் நடிகர் சாந்தனு இயக்குநர் சாந்தனுவாக மாறி தனது மனைவியுடன் எடுத்த கொஞ்சம் கொரோனா நிறைய காதல் குறும்படத்தை நேற்று ரிலீஸ் செய்து பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றார். மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள சாந்தனு, அதுல்யா ரவிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றிலும் நடிக்க கமீட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











