சவாலை ஏற்று மனைவியிடம் சிக்கிய சாந்தனு: தரமான சம்பவம் வெயிட்டிங் #10YearChallenge
சென்னை: 10 இயர் சவாலை ஏற்று மனைவியிடம் வசமாக சிக்கியுள்ளார் நடிகர் சாந்தனு.
10 இயர் சவால் தான் பிரபலங்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல உட்களிலும் பிரபலங்கள் இந்த சவாலை ஏற்று தங்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பும், தற்போதும் எடுத்த புகைப்படங்களை சேர்த்து வெளியிட வேண்டும்.
சாந்தனு
10 இயர் சவாலை ஏற்று சாந்தனு வெளியிட்ட புகைப்படங்களால் அவரின் மனைவி கீர்த்தியிடம் வசமாக சிக்கியுள்ளார். புகைப்படங்களை வெளியிடும்போதே அதன் பின்விளைவுகள் என்ன என்பது அவருக்கு தெரியும்.
கீர்த்தி
சாந்தனுவின் ட்வீட்டை பார்த்த மனைவி கீர்த்தி, சிறப்பான தரமான சம்பவங்களை இனிமே தான் பார்க்க போரெ #10YearChallenge என்று தெரிவித்துள்ளார்.
ஹேமா ருக்மணி
மெர்சல் பட தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி 10 இயர் சவாலை ஏற்று தான் விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 10 வருஷமாக விஜய் அப்படியே இருக்கிறார்.
ஜிவி பிரகாஷ்
10 இயர் சவாலை ஏற்று நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட புகைப்படங்கள்.


Click it and Unblock the Notifications











