Just In
- 3 min ago
வாவ்.. லாஸ்லியா, தர்ஷன் படத்துக்கு பூஜை போட்டாச்சு.. டைட்டிலே வித்தியாசமா இருக்கே.. ரசிகர்கள் குஷி!
- 13 min ago
கையில் கோடாரியுடன் முரட்டு லுக்கில் அல்லு அர்ஜுன்.. 'புஷ்பா' ரிலீஸ் தேதி கெத்தாக அறிவிப்பு!
- 49 min ago
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா.. பாலாஜி முருகதாஸ் போட்ட ட்வீட்.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
திஷா கால்ஷீட் பிரச்னை.. பிரபல ஹீரோ ஜோடியான ஸ்ருதி ஹாசன்.. பிறந்த நாளில் ஜில் அறிவிப்பு
Don't Miss!
- Finance
பசுமை வரி.. பழைய வாகன உரிமையாளர்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டியிருக்கும்..!
- Automobiles
2021 டிரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்எஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்... பிப்ரவரி இறுதியில் டெலிவரி...
- News
"பாஜகவுக்கு மாற்று".. புதிய கட்சி தொடங்குகிறார் அர்ஜுன மூர்த்தி.. ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு!
- Sports
ஜப்பான்ல 3வது கொரோனா அலை... ஒலிம்பிக் 2020 போட்டிகளை நடத்துறதுல நீடிக்கும் சிக்கல்
- Education
ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்ற ஆசையா?
- Lifestyle
இந்த ஒரு பொருள் மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க உதவும் தெரியுமா? எப்படி சாப்பிடுவது?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கணவனும் மனைவியும் சேர்ந்து.. எப்படி ஆடி இருக்காங்க பாருங்க.. வைரலாகும் ‘வாத்தி கம்மிங்’ டான்ஸ்!
சென்னை: நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கீக்கீ எனும் கீர்த்தி சாந்தனு இணைந்து மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிளான 'வாத்தி கம்மிங் ஒத்து' பாட்டுக்கு மரண குத்து குத்தியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
அனிருத் இசையில் வெளியான மாஸ்டர் படத்தின் பாடல்களான குட்டி ஸ்டோரி மற்றும் வாத்தி கம்மிங் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

செம குத்து
கீக்கீ விஜய்யின் நடன பள்ளியில் வாத்தி கம்மிங் ஸ்டெப் சேலஞ்ச் போடப்பட்டுள்ளது. நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி இணைந்து மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு போட்டுள்ள மரண குத்து டான்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. நாளை இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், சரியான டிரிப்யூட்டாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

வேற லெவல் ஆட்டம்
வாத்தி கம்மிங் பாடலுக்கு, நடிகர் சாந்தனு போட்டுள்ள வேற லெவல் ஸ்டெப் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சக்கரக்கட்டி படத்தில் இடம்பெற்ற டாக்ஸி டாக்ஸி பாடல் மற்றும் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் இடம்பெற்ற டமுக்காட்லான்.. டுமுக்காட்லான் பாடல்களில் தனது நடனத்தால் பட்டையை கிளப்பிய சாந்தனு, தற்போது அதைவிட சிறப்பாக ஆடியுள்ளார்.

குவிகிறது பாராட்டு
மாஸ்டர் செகண்ட் சிங்கிள் பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தனா போட்டுள்ள தர லோக்கல் குத்து நடனத்தை பார்த்த தளபதி ரசிகர்கள் மெர்சலாகி உள்ளனர். மேலும், நடிகை ராதிகா சரத்குமார், துல்கர் சல்மான், நிதின் சத்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் சாந்தனுவின் நடனத்தை பாராட்டி வருகின்றனர்.

இவரே இப்படின்னா
சிறந்த டான்ஸரான சாந்தனு, மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் ஒத்து பாடலுக்கு இப்படியொரு மிரட்டலான ஸ்டெப் போட்டு ஆடி இருக்கும் நிலையில், இந்த பாட்டுக்கு, தளபதி விஜய் எப்படி ஸ்டெப் போட்டு அசத்தலாக ஆடியிருப்பாரோ என்ற எதிர்பார்ப்பு தளபதி ரசிகர்களை திரையில் அந்த பாடலை காணும் வரை தூங்கவிடாது.