கொஞ்சம் கொரோனா நிறைய காதல்.. இயக்குநரான சாந்தனு.. கிகி நடிப்பு சூப்பர்.. செம மெசேஜ் #KoCoNaKa

சென்னை: இந்த லாக்டவுனில் நடிகர் சாந்தனு தனது தந்தை பாக்கியராஜ் போல இயக்குநராக மாறி குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

கொஞ்சம் கொரோனா நிறைய காதல் ஷார்ட்டாக KoCoNaKa என்ற தலைப்பில் தற்போது வெளியாகி உள்ள அந்த குறும்படத்திற்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் வீட்டிலேயே நடித்து, இயக்கி, எடிட் செய்துள்ள இந்த குறும்படத்தில் மனைவிமார்களை கவரும் சூப்பர் மெசேஜும் இருக்கிறது.

ஓய்வின்றி

ஓய்வின்றி

இந்த கொரோனா லாக்டவுனில் வீட்டில் ஹாயாக புருஷன்கள் மற்றும் இளைஞர்கள் வேலைக்கு செல்லாமல் விளையாட்டு, படம் பார்ப்பது என தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர். அதே நேரத்தில் அதற்கு மாறாக பெண்கள் இந்த நேரத்திலும், எப்போதும் போலவே ஓய்வின்றி வீட்டு வேலைகளை செய்து வருகின்றனர்.

மாற்றலாம் மாறலாம்

மாற்றலாம் மாறலாம்

இந்நிலையில், ஆண்களும், ஓய்வாக இருக்கும் இந்த நேரத்தில் தங்கள் அம்மாவுக்கோ, அக்காவுக்கோ, தங்கைக்கோ அல்லது மனைவிக்கோ தங்களால் முடிந்த வேலைகளை செய்து உதவலாம் என்ற அருமையான மெசேஜை வலியுறுத்தி நகைச்சுவை ததும்ப ஒரு கொரோனா குறும்படத்தை இயக்கி நடித்துள்ளார் சாந்தனு.

கிகி நடிப்பு சூப்பர்

கிகி நடிப்பு சூப்பர்

மனைவியின் வேலைகளை கணவன் செய்வது போலவும், கணவன் எப்படி வீணாக பொழுதை கழிக்கிறார் என்பதையும் இந்த ஷார்ட் பிலிமில் நடிகர் சாந்தனு காட்டியுள்ளார். அதில், அவரது மனைவி கீர்த்தனா எனும் கிகி விஜய் சூப்பராக நடித்து பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் அள்ளி வருகிறார்.

அதே ரத்தம்

அதே ரத்தம்

"அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்" என்ற வசனத்தை போல இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜை போல அவரது மகன் சாந்தனுவும் சூப்பரா இந்த குறும்படத்தை இயக்கி இருப்பதாக பல பிரபலங்களும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். #KoCoNaKa என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. நீங்களும் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாமே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X