சந்தோஷம் தான்! பாவக் கதைகள் மூலமாக பாக்கியராஜை பெருமைப்படுத்திய சாந்தனு.. வைரலாகும் மீம்!
சென்னை: நெட்பிளிக்ஸில் வெளியான ஆந்தாலஜி திரைப்படமான பாவக் கதைகள் பற்றித் தான் பட்டித் தொட்டி எங்கும் பேச்சாக இருக்கிறது.
நெட்பிளிக்ஸ் அக்கவுன்ட் இல்லாதவர்களையும் அதனை ஆக்டிவேட் செய்ய பாவக் கதைகள் நிச்சயம் தூண்டும் என்றே நம்பப்படுகிறது.
ஒவ்வொரு கதையும் தனித்துவம் மிக்கதாக இருந்தாலும், சுதா கொங்கராவின் தங்கம் ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளன.

பெண்களின் நிலை
சமூகத்தில் பெண்களை சுற்றி நடக்கும் வன்முறைகளை பாவக் கதைகளின் 4 கதைகளும் உரக்கச் சொல்லி உள்ளன. சிகப்பு நிறத்தை பயன்படுத்தி ஆரம்பிக்கும் அனிமேஷன் பாடலிலேயே கனத்த கருத்தை உருவாக்கி உள்ளனர். இயக்குநர்கள் வெற்றிமாறன், கெளதம் மேனன், விக்னேஷ் சிவன் மற்றும் சுதா கொங்கரா ஆகியோர் உருவாக்கிய இந்த ஆந்தாலஜி நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது.

சுதா கொங்கராவின் தங்கம்
தங்கம் கதாபாத்திரத்தில் நடித்த சாந்தனுவின் நடிப்பும் திருநங்கை சத்தாராக நடித்த காளிதாஸின் நடிப்பையும் வெகுவாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பாவக் கதைகள் ஆந்தாலஜியில் இடம்பெற்ற தங்கம் கதையில் நடித்து அசத்திய நடிகர் சாந்தனுவை பாராட்டும் வகையில் வெளியாகி உள்ள மீம் ஒன்று வைரலாகி வருகிறது.
சாந்தனுவை பாராட்டி மீம்
சாந்தானுவின் நடிப்பை பார்த்து, "என் பையன் சார்" என நிச்சயம் பாக்கியராஜ் பெருமைப்படுவார் என உருவாக்கப்பட்டுள்ள அந்த மீமை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த நடிகர் சாந்தனு, இது நல்ல ஒரு மீம் என்றும், கண்டிப்பாக அப்பா பெருமைப்பட்டார்.. அது தான் எனக்குத் தேவை என பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
மறக்க முடியாத சத்தார்
அதே போல நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ், தங்கம் படத்தில் சத்தாராக நடித்திருந்தார். திருநங்கை கதாபாத்திரத்தில் அத்தனை கச்சிதமாகவும், இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தங்கம் கதையில் இறந்து போன சத்தாரை சமூக வலைதளங்களிலும் சமுதாயத்திலும் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

மாஸ்டரிலும்
சுதா கொங்கராவின் தங்கம் கதையில் நடிகர் சாந்தனு தனது சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். அதே போல, அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்திலும் நடிகர் சாந்தனு தனது சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார் என்றே தெரிகிறது. இந்த ஆண்டு வெளியான வானம் கொட்டட்டும் படத்திலும் சாந்தனுவின் நடிப்பு பாராட்டுக்களை அள்ளியிருந்தது. முருங்கைக் காய் சிப்ஸ் படமும் உருவாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











