தளபதி இப்போ ஜோசப் விஜய்யா, ரொம்ப கேவலம்: சாந்தனு
சென்னை: இளையதளபதி விஜய்யை தற்போது ஜோசப் விஜய் என்று கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது, ரொம்ப கேவலம் என்று நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.
மெர்சல் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் தளபதி விஜய்யை அரசியல் தலைவர் ஒருவர் ஜோசப் விஜய் என்று கூறியுள்ளார். படப் பிரச்சனையில் மதத்தை இழுத்துள்ளதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் சாந்தனு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
வேடிக்கை
இளையதளபதி விஜய்யை தற்போது ஜோசப் விஜய் என்று கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. பிரச்னைக்கு முடிவு கெடைக்கலேனா, இது தான் தீர்வா? ரொம்ப கேவலம்.
தமிழன்
மதம் என்பது வெறும் வார்த்தையே. தமிழன் என்பது தான் உணர்ச்சி
மெர்சல்
மெர்சல் மறுபடியும் சென்சார் செய்யப்படுவது ஜனநாயக நாட்டில் வாழும் நம் அனைவருக்கும் வெட்கம். அந்த மனுஷன விடுங்கப்பா, ஆ ஊன்னா அவரு படத்தை கொக்கி போட்றீங்க
சாந்தனு
ஜோசப் சாந்தனுன்னு சொன்னா இப்போ என்னா பாஸ்?


Click it and Unblock the Notifications











