இந்த ஜோடி எப்படி இருக்கு?.. ஆர்ஜே விஜய்யுடன் சாந்தனு மனைவி செம போஸ்.. என்ன ஆச்சு என பதறிய ரசிகாஸ்!
சென்னை: பாக்கியராஜின் மருமகளும் நடிகர் சாந்தனுவின் மனைவியுமான கிக்கி விஜய் எனும் கீர்த்தி சாந்தனு ஆர்ஜே விஜய்யுடன் நடத்திய வெட்டிங் தீம் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை பரபரப்பாக்கி உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு போட்டியாளர்களும் ஜோடி ஜோடியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், கிகி விஜய் இன்ஸ்டாகிராமில் புதிய பிக்ஸ் வந்ததும் சாந்தனுவுடன் தான் அவர் போட்டோஸ் எடுத்துள்ளார் என ஓடோடி வந்து பார்த்த ரசிகர்கள் செம ஷாக் ஆகி உள்ளனர்.

சாந்தனுவுக்கு பதில் ஆர்ஜே விஜய் உடன் ஜோடி போட்டு கிகி விஜய் இப்படியொரு போட்டோஷூட்டை நடத்தி உள்ளார்.
புது ஜோடி: நடிகர் சாந்தனுவின் மனைவியாக கிகி விஜய் வெளிநாட்டுக்கு நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றுள்ள நிலையில், அங்கே ஆர்ஜே விஜய்யுடன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திடீரென அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை தாறுமாறாக பதிவிட்டு வருகின்றனர்.
சாந்தனு பார்க்கும் வரை: கிகி விஜய் ஆர்ஜே விஜய் உடன் எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சாந்தனு பார்க்கும் வரை இதை ஷேர் செய்யவும் என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். என்ன கீர்த்தி என்ன ஆச்சு? என்றும் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
செம போஸ்: பட்டுச்சேலை அணிந்து கொண்டு மணப்பெண் போல கிகி விஜய்யும், மாப்பிள்ளை போல குர்தா லுக்கில் ஆர்ஜே விஜய்யும் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் கனடாவில் எடுக்கப்பட்டுள்ளதாக கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். செம ஃபன்னாக இருந்தது இப்படியொரு போட்டோஷூட் நடத்தும் போது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மோசமான கமெண்ட்ஸ்: இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள் என ரசிகர்கள் பதிவிட்டும் அதை விட மோசமான கமெண்ட்டுகளையும் பதிவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிர வைத்துள்ளனர்.
கணவர் போட்ட கமெண்ட்: ஆனால், இந்த போட்டோக்களை பார்த்து விட்டு இரு ஹார்ட்டின்களை மட்டுமே கேப்ஷனாக சாந்தனு பதிவிட்டு இருப்பது அனைவரது லைக்குகளையும் அன்பையும் அள்ளி உள்ளது.


Click it and Unblock the Notifications











