சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ்...ரொமான்டிக் புரோமோ வீடியோ வெளியீடு
சென்னை : சாந்தனு பாக்யராஜ், சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இது சாந்தனுவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
இதனால் சாந்தனு நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டள்ளது. காமெடி என்டர்டைன்மென்ட் படமான முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் சாந்தனுவிற்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.

புதுமுக இயக்குனரான ஸ்ரீஜர் இயக்கி உள்ள இப்படத்தை ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஏதோ சொல்ல பாடலின் சிங்கிள் டிராக் பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு, ஏதோ சொல்ல பாடலின் புரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தருண் குமார் இசையில், சித் ஸ்ரீராம் நடனம் அமைத்துள்ள இந்த பாடல் இசை பிரியர்களின் மனம் கவர்ந்ததாக அமைந்துள்ளது.
இந்த பாடலில் வரும் காட்சிகள், சாந்தனுவின் அழகிய நடன அசைவுகள் என அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த பாடலின் புரோமோ வீடியோ சோனி மியூசிக்கின் அதிகாரப்பூர்வ யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 83,000 க்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











