Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னது...போலியா டிரைலரே ரெடி பண்ணுறாங்களா? சாந்தனு சொன்ன பகீர் தகவல்
சென்னை : இராவண கோட்டம் படத்தின் டிரைலர் என போலியான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளதாக நடிகர் சாந்தனு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதை பார்த்து விட்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சோஷியல் மீடியாக்களில் போலி கணக்குகள், போலியாக படத்தின் போஸ்டர்கள் வெளியிடுவது போன்றவை அடிக்கடி நடப்பது வழக்கமாகி விட்டது. ஆனால் தற்போது அதற்கும் ஒரு படி மேலே போய் போலியாக டிரைலரே ரெடி பண்ணி, வெளியிடுகிறார்களாம்.
எப்படி போட்டாலும் கண்டு பிடிச்சிடுறாங்களே? பிக் பாஸ் அல்டிமேட்டின் 7வது போட்டியாளர் யார் தெரியுமா?

சாந்தனுவின் புதிய படம்
பிரபல நடிகரும், முன்னணி டைரக்டர்களில் ஒருவருமான கே.பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் தற்போது டைரக்டக்டர் விக்ரம் சுகுமாறன் இயக்கி உள்ள இராவணக்கோட்டம் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். டைரக்டர் விக்ரம் சுகுமாறன், மதயானைக் கூட்டம் படத்தை இயக்கி அனைவர் மத்தியிலும் பேசப்பட்டவர். கயல் ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.

இதுதான் பட கதையா
மோசமான அரசியலுக்கு எதிரான கதையம்சம் கொண்ட இராவணக்கோட்டம் படம் ராமநாதபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. ஷுட்டிங் நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதற்காக அனைவருக்கும் டைரக்டர் ட்விட்டரில் நன்றியும் தெரிவித்திருந்தார்.

என்ன போலி டிரைலரா
ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கண்ணன் ரவி படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் பிரபு மிக முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் இராவணகோட்டம் டிரைலர் என்ற பெயரில் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியானது. இந்நிலையில் இந்த வீடியோ போலியானது என சாந்தனு தெரிவித்துள்ளார்.

சாந்தனு சொன்ன பகீர் தகவல்
இது பற்றி ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சோஷியல் மீடியாவில் எனது அடுத்த படமான இராவணகோட்டம் படத்தின் டிரைலர் என்ற பெயரில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. இது போலியான வீடியோ. அதிகாரப்பூர்வ டிரைலர் விரைவில் வெளியிடப்படும். மற்ற விபரங்களும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

கலாய்க்கும் நெட்டிசன்கள்
போலியான டிரைலரா என பலர் அதிர்ச்சி தெரிவித்திருந்தாலும், சாந்தனுவை கலாய்த்து நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். யாரும் பாக்கல நீங்க டென்ஷன் ஆகாதீங்க. ஒரிஜினல் விட்டாலும் வேணாம் ப்ரோ. யாரும் பார்க்காத டிரைலரை பார்க்க வைக்க டெக்னிக்கா. ஒன்னும் அவசரமில்ல...மெல்ல உடுங்க என பலர் கமெண்ட் செய்துள்ளனர்.