அம்மா முன்னாடி மண்டியிட்டு ஆறுதல் சொன்னீங்களே அண்ணா.. சிஎம் விஜய்யின் செயலால் உருகிய சாந்தனு!

சென்னை: தமிழ் சினிமாவின் ஜாம்பவானான இயக்குனர் கே.பாக்யராஜ் மறைந்த சோகத்தில் இருந்து திரையுலகமே இன்னும் மீளவில்லை. மாரடைப்பால் காலமான அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழ் கலைத்துறைக்கு பாக்யராஜ் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பைப் போற்றும் வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதோடு, அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மண்டியிட்ட முதல்வர்: இந்நிலையில், தனது தந்தையின் இறுதிச்சடங்கிற்கு நேரில் வந்து தோள் கொடுத்த தமிழக முதல்வர் விஜய்க்கு, பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு பாக்யராஜ் தனது எக்ஸ் (X) தளத்தில் கண்ணீர் மல்க நன்றிக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். சிஎம் விஜய் அஞ்சலி செலுத்திய புகைப்படத்தைப் பகிர்ந்து சாந்தனு பதிவிட்டிருப்பது நெட்டிசன்களின் இதயத்தை கனக்கச் செய்துள்ளது.

CM Vijay Bhagyaraj Shanthnu
Photo Credit:

எமோஷனல் பதிவு இதோ: உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது 247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்? மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது. என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை. அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.

உருக்கமான பதிவு: அரசு மரியாதை, மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதைக்கு வேறென்ன சொல்ல? இதயம் கூப்பிய நன்றி அண்ணா என பதிவிட்டுள்ளார். ஒரு டாப் ஸ்டாராக, முதலமைச்சராக இருந்தாலும் விஜய்யின் இந்த எளிமைதான் அவரை வேற லெவலில் நிறுத்துகிறது என சாந்தனுவின் இந்த ட்வீட்டை தவெக தொண்டர்கள் மற்றும் தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X