ஷாரிக் -மரியா ஹனிமூன் ட்ரிப்.. அட கூட மகளையும் கூட்டிட்டு போயிருக்காங்களே!
சென்னை: நடிகர் ஷாரிக் ஹாசன் தமிழ் படங்களில் நடித்துவரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஷாரிக்கிற்கு இது முதல் திருமணம் என்ற வகையில், மரியா முன்னதாக திருமணமாகி 9 வயது மகளுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கட்டினால் மரியாவைத்தான் கட்டுவேன் என்று பிடிவாதத்துடன் ஷாரிக் இந்த திருமணத்தை முடித்துள்ளார்.
இதனிடையே தன்னுடைய மகளுக்கு ஷாரிக் சிறந்த அப்பாவாக செயல்படுவதாக மரியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முன்னதாகவே தன்னுடைய மகள் மீது ஷாரிக் காட்டிய அன்பால் மட்டுமே தான் ஷாரிக்கை திருமணம் செய்துக் கொள்ள சம்மதித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

ஷாரிக் & மரியா ஜோடி: சின்னத்திரை, சினிமா என அடுத்தடுத்து செயல்பட்டு வரும் ரியாஸ்கான் மற்றும் உமா ரியாசின் மூத்த மகன் ஷாரிக்கின் திருமணம்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹாட் டாபிக்காக இருந்தது. பென்சில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஷாரிக் ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாகவும் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்திவந்த இவருக்கு தன்னுடைய ஜிம்மில் செயல்பட்டுவந்த மரியா ஜெனிஃபர் மீது காதல் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அவரிடம் ஷாரிக் பேசப்போக, அவரை கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார் மரியா. இதுவே அவர்மீது ஷாரிக்கிற்கு காதல் ஏற்பட காரணமாக அமைந்ததாகவே அவர் முன்னதாக தன்னுடைய பேட்டிகளில் கூறியுள்ளார்.
தடபுடலாக நடந்த திருமணம்: ஒருகட்டத்தில் தன்னுடைய காதலை ஷாரிக் வெளிப்படுத்திய நிலையில், முன்னதாக திருமணமாகி தன்னுடைய 9 வயது பெண்குழந்தையுடன் தனியே வாழ்ந்துவந்த மரியா தயக்கம் காட்டியுள்ளார். ஆனால் அவரது வீட்டிற்கு வரப்போக இருந்துள்ள ஷாரிக், மரியாவின் மகளை தன்னுடைய மகளாக நினைத்து அன்பு காட்டியதும் மரியாவும் ஷாரிக்கின் காதலுக்கு ஓகே சொல்ல இவர்களின் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. தன்னுடைய அப்பா, அம்மாவிற்குகூட இந்த திருமணத்தை முன்னதாக கூறாமல், அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டுதான் ஷாரிக் கூறியுள்ளார். ஆனால் விஷயம் தெரிந்தவுடன் சும்மா இல்லாமல் ரியாஸ்கான் மற்றும் உமா ரியாஸ் இருவரும் இந்த திருமணத்தை தடபுடல் செய்துள்ளனர்.

பிரபலமான தம்பதி: இந்த திருமணம் ஷாரிக்கை மிகவும் பிரபலமாக்கிவிட்டது. ஷாரிக்கிற்கு இது முதல் திருமணம் என்ற வகையில், தன்னைவிட 3 வயது மூத்தவரான மரியாவை, ஏற்கனவே திருமணமாகி 9 வயது குழந்தையுடன் இருந்த அவரை திருமணம் செய்துள்ளார் ஷாரிக். அவரது இந்த முடிவிற்கு அவரது பெற்றோரும் ஓகே சொன்ன நிலையில், இந்த திருமணம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. ஆனால் மரியா மூலம் கிடைத்த சொத்துக்களுக்காகவே ஷாரிக் ஹாசன் இந்த திருமணத்தை செய்துக் கொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. எது எப்படியோ, மரியாவை திருமணம் செய்துக் கொண்டு செட்டிலாகிவிட்டார் ஷாரிக்.
ஷாரிக் & மரியா ஹனிமூன் ட்ரிப்: இதனிடையே தற்போது மரியாவுடன் அவர் தேனிலவிற்கும் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் அடுத்தடுத்த வீடியோக்களை அழகான பாடல்களுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இதில் என்ன ஹைலைட் என்றால் மரியாவின் மகளையும் இந்த ஹனிமூன் ட்ரிப்பில் இந்த ஜோடி இணைத்துக் கொண்டுள்ளது. தன்னுடைய மகளுடன் ஷாரிக் நடைபோடுவதும், மரியாவை உப்புமூட்டை தூக்குவதும் அழகான இடத்தில் ஸ்விம்மிங் செய்வதும் என அடுத்தடுத்த வீடியோக்களை ஷாரிக் பகிர்ந்துவரும் நிலையில், இந்த வீடியோக்களை ஏராளமான ரசிகர்களை லைக்ஸ்களால் நிரப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











