8 வயது மகளுடன் தலதீபாவளி கொண்டாடிய ஷாரிக்… இணையத்தில் டிரெண்டாகும் போட்டோஸ்!

சென்னை: பிரபல நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கானின் மகனான ஷாரிக் ஹாசன் மற்றும் மரியா ஜெனிஃபரின் திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று குடும்பத்துடன் தல தீபாவளியை கொண்டாடிய போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளனர்.

விசு இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் படத்தில், அதிகம் பேசாமல், பார்வையால் அனைத்து நடிப்பையும் காட்டியவர் தான் கமலா காமேஷ். அந்த படத்தில் வரும் வீசு கோதாவரி என்று கூப்பிட்டதும் அனைவரின் முன்னும் வந்து போவது இந்த முகம் தான். 80 கால கட்டத்தில் அம்மா கதாபாத்திரம் என்றாலே அது கமலா காமேஷ் தான். இவரின் மகள் தான் உமா. இவர் அன்பே சிவம், மௌனகுரு போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

uma riyas khan shariq hassan maria haasan

ரியாஸ் கான்,உமா ரியாஸ்: இவர் சினிமாவில் பல ஆண்டுகளாக வில்லன் நடிகராக மிரட்டிக்கொண்டு இருக்கும் ரியாஸ் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில், ஷாரிக் ஹாசன் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு அனைவருக்கு தெரிந்த முகமாக மாறினார். இதைத்தொடர்ந்து, டான், ஜகிரி தோஸ்து உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்..

காதல் திருமணம்: ஷாரிக் ஹாசன் மரியா ஜெனிஃபர் என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், இந்த காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததை அடுத்து பெற்றோர் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதை அடுத்து, இவர்களின் திருமண ஆகஸ்ட் 8-ஆம் தேதி, அடையாறில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

uma riyas khan shariq hassan maria haasan

பார்த்ததும் காதல்: அண்மையில் யூடியூப் சேனலுகு பேட்டி அளித்த, நான் ஈசிஆரில் இருக்கும் ஒரு ஜிம்முக்கு சென்றேன். அந்த ஜிம்மில் தான் நான் முதன் முதலில் மரியாவை பார்த்தேன்.முதன் முதலில் நான் பார்த்து சிரித்தேன். ஆனால், என்னைப் பார்த்து கண்டுக்கவே இல்லை. அப்போதுதான் இவர்கள் மீது எனக்கு காதல் வந்தது. மரியாவிற்காகவே தினம் தினம் ஜிம்முக்கு போய் மரியாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கினேன் என்று கூறியிருந்தார்.

வயதில் சிறியவர்: இதையடுத்து பேசிய மரியா, முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையாததால், நான் இரண்டாவது திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை. என் மகள் ஜாரா சந்தோஷமா இருக்கனும் என்று அவளைபத்தி மட்டும் தான் யோசித்தேன். ஷாரிக் என்னைவிட சின்னவன் என்பதால், அவர் காதலிக்கிறார் என்று தெரிந்தும் காதலிக்கிறேன் என்று சொல்லவே இல்லை. ஆனால் என் மகள ஜாராவிற்கு ஷாரிக்கை பிடித்துவிட்டது.எங்களுடைய காதல் வாழ்க்கை ஆரம்பிக்க காரணமே ஜாரா தான் என்று அந்த பேட்டியில் மரியா கூறியுள்ளார்.

uma riyas khan shariq hassan maria haasan

தல தீபாவளி: இதையடுத்து நேற்று ஷாரிக் ஹாசன் மரியா ஜெனிஃபர் தம்பதியுடன் தல தீபாவளியை கொண்டாடி உள்ளனர். ஷாரிக்கின் அம்மா, அப்பா மற்றும் சகோதரன் மற்றும் 8 வயது மகள் ஜாராவுடன் இருக்கும் போட்டோவை ஷாரிக் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X