Shariq Hassan: கோவில் வாசலில் மனைவியுடன் செம ரொமான்ஸ்.. ஷாரிக் பகிர்ந்த நச் புகைப்படங்கள்!
சென்னை: நடிகர் ஷாரிக் ஹாசன் மரியா ஜெனிஃபர் திருமணம் சில வாரங்களுக்கு முன் சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் முதல் வெள்ளித்திரை பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் கிறிஸ்தவ முறைப்படியும் இந்து முறைப்படியும் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் பொதுமக்களை மிகவும் ஆச்சரியப்பட வைத்த விஷயம் என்றால் ஷாரிக் ஹாசனை விட மரியா ஜெனிபருக்கு மூன்று வயது அதிகம். இது மட்டுமில்லாமல் ஜெனிஃபர் ஏற்கனவே திருமணம் ஆகி அவருக்கு 9 வயதில் மகள் உள்ளார். தனது மகளின் முன்னிலையில் ஷாரிக்கை ஜெனிபர் கரம் பிடித்தார்.
மிகவும் கோலாகலமாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு பின் இவர்கள் தேனிலவுக்காக வெளிநாடு சென்றனர். உடன் ஜெனிபரின் மகளான ஒன்பது வயது குழந்தையையும் அழைத்துச் சென்றனர். இது தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதேபோல் சில வாரங்களுக்கு முன் இருவரும் சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றனர். அப்போது அவர்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டதை வீடியோ எடுத்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தனர். இந்நிலையில் கோயிலுக்கு சென்றபோது தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷாரிக் மற்றும் மரியா ஜெனிஃபர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
துரத்தி துரத்தி: இவர்கள் ஹனிமூன் மாலத்தீவு சென்றனர். அதேபோல் திருமணத்திற்கு பெண் இருவரும் பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது ஜெனிபர், ஷாரிக் தன்னை துரத்தி துரத்தி காதலித்த தொடர்பாக தெரிவித்தார். மேலும் தனக்கு ஏற்கனவே 9 வயதில் பெண் குழந்தை இருப்பதையும் ஷாரிக் இடம் கூறியதாகவும் அதற்கு ஷாரிக் எனது குழந்தையை அவரது குழந்தையாக பார்த்துக் கொள்வார் என கூறியதாகவும் கூறினார்.
கலாய்: பல பேட்டிகளில் இவர்கள் குடும்பத்துடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக ஷாரிக்கின் பெற்றோர்களான உமாரியாஸ் மற்றும் ரியாஸ்கான் தம்பதியர் பல பேட்டிகளில் தங்களது மகனை செம்மையாக கலாய்த்தனர். இந்த பேட்டிகள் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. அதே நேரத்தில் ஷாரிக் ஜெனிபரை திருமணம் செய்து கொள்ள காரணமே வரதட்சணை தான் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் இவற்றையெல்லாம் ஷாரிக்கோ குடும்பத்தினரோ கண்டு கொள்ளவில்லை.
புகைப்படங்கள்: இப்படியான நிலையில் இவர்கள் தற்போது தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதாவது சென்னை வடபழனி முருகன் கோயில் வீதியில் ஷாரிக் ஜெனிபரின் கரங்களைப் பிடித்துக் கொண்டு கோயிலுக்கு அழைத்து செல்வதும் கோயிலுக்குள் செல்வதற்கு முன் பூ வாங்கி ஜெனிபருக்கு வைத்து விடுவதும் என ரொமான்ஸ் பொங்கும் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்களும் இணையவாசிகளும் இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











