நடிகர் சல்மான் கானை சுட்டுக் கொல்ல திட்டம்.. போலீசார் ஷாக்.. பிரபல தாதா கும்பலைச் சேர்ந்தவர் கைது!

By

மும்பை: நடிகர் சல்மான் கானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல, பிரபல ரவுடி முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

Salman Khan is next target | Sushant Singh Case

பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், கொரோனா காரணமாக பன்வலில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்துவந்தார்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு, இப்போது மும்பை திரும்பியுள்ள அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

லாரன்ஸ் பிஷ்னோய்

லாரன்ஸ் பிஷ்னோய்

இந்நிலையில் சல்மான் கானை கொல்ல, தாதா கும்பல் முயன்றுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த கொலை ஒன்று தொடர்பாக, ராகுல் என்பவரை ஃபரிதாபாத் போலீசார் கைது செய்தனர். அவர், சிறையில் இருக்கும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

வீட்டில் கண்காணிப்பு

வீட்டில் கண்காணிப்பு

அவர், பிரபல நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்டுள்ளார். இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதற்காக, மும்பை பாந்த்ராவிலுள்ள சல்மான் கானின் வீட்டை கடந்த ஜனவரி மாதம் ராகுல் உளவு பார்த்துள்ளார். இரண்டு நாள்கள் அந்தப் பகுதியில் தங்கி, அவர் வீட்டுக்கு வந்து செல்வோரையும் சல்மான் கான் எப்போதாவது வெளியே நடமாடுகிறாரா என்பதையும் கண்காணித்துள்ளார்.

சுடுவதில் தேர்ந்தவர்

சுடுவதில் தேர்ந்தவர்

சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூறியபடியே இப்படி கண்காணித்துள்ள ராகுல், அவரிடம் தகவல் தெரிவித்துவிட்டு அவர் உத்தரவுக்கு காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள ராகுல், துப்பாக்கியால் குறிபார்த்து சுடுவதில் தேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்துள்ளதன் மூலம், சல்மானை கொல்ல நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

பிஷ்னோய் இனமக்கள்

பிஷ்னோய் இனமக்கள்

அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு சிறை தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். மானை தெய்வமாக வழிபடும் பிஷ்னோய் இனமக்கள், நடிகர் சல்மான் கான் மீது கோபத்தில் உள்ளனர். அந்த இனத்தை சேர்ந்த பிரபல தாதா, லாரன்ஸ் பிஷ்னோய், சல்மான் கானை கொல்வோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார்.

பரத்பூர் சிறை

பரத்பூர் சிறை

அவர் மீது கொலை, கொள்ளை, பணம் கேட்டு மிரட்டல் உள்பட பல வழக்குகள் உள்ளன. வெளிநாட்டு ஆயுதங்களை வைத்திருந்ததாக பஞ்சாப் போலீசார் இவரைக் கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்து ராஜஸ்தானின் பரத்பூர் சிறையில் அடைத்துள்ளனர். அங்கிருந்தபடியே அவர் பல சமூக விரோத செயல்களை செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X