மகளுக்கு இப்படியா அட்வைஸ் பண்ணுவாங்க..ஷாருக்கான் மனைவியை விளாசும் நெட்டிசன்ஸ்!
மும்பை : பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மனைவி தனது மகளுக்கு டேட்டிங் அட்வைஸ் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல மாஸ் திரைப்படங்களை கொடுத்து பாலிவுட்டில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கும் ஷாருக்கான். 80களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார்.
இவருக்கு கௌரி என்ற மனைவியும், ஆர்யா கான், அப்ராம் கான் என்ற மகனும் சுஹானா கான் என்ற மகளும் உள்ளார். மனைவி கௌரி காஸ்டியூம் டிசைனராக உள்ளார்.

கரண் ஜோகர்
இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், காஸ்ட்யூம் டிசைனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் கரண் ஜோகர். இவரது பல படங்கள் பாலிவுட்டில் சிறப்பாக அமைந்தவை. இவர் தொகுத்து வழங்கி வரும் காபி வித் கரண் நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.

காபி வித் கரண்
டிவியில் பல ஷோக்களை இவர் இதுபோல தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது காபி வித் கரண் நிகழ்ச்சியை மீண்டும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். அண்மையில் சமந்தா மற்றும் அக்ஷய் குமார் இருவரும் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு இருவரும் இணைந்து நடனமாடியது வைரலானது. அது மட்டுமில்லாமல் நயன்தாராவை முன்னணி நடிகை இல்லை என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

டேட்டிங் அட்வைஸ்
ஷாருக்கானின் மனைவி கெளரி காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில், உங்கள் மகள் சுஹானாகானுக்கு டேட்டிங் குறித்து என்ன அட்வைஸ் கொடுப்பீங்க என்ற கேள்விக்கு, பதிலளித்துள்ள கௌரி, ஒரே நேரத்தில் இரண்டு பையன்களை டேட்டிங் செய்யாதே என்று கூறுவேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த பதில் இணைய தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விளாசிய நெட்டிசன்ஸ்
இந்த பதிலைக் கேட்ட ரசிகர்கள் மகளுக்கு இப்படியா அட்வைஸ் பண்ணுவாங்க என கேட்டு அவரை விளாசி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











