ஷர்வியின் பெட்டர் டுமாரோ.. படத்துக்கு என்ன சர்ட்டிஃபிக்கேட் தெரியுமா?

சென்னை: டூ ஓவர் என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர் ஷர்வி. அந்தப் படம் சில சர்வதேச திரைப்பட விழா விருதுகளை வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவர் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் பெட்டர் டுமாரோ. அந்தப் படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியிருக்கிறது.

ஷர்வி இயக்கிய டூ ஓவர் திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. மானவ, மரியா பிண்டோ உள்ளிட்டோர் நடித்திருந்த அத்திரைப்படத்தின் மூலம் ஷர்வி சிறந்த இயக்குநர் என்ற பெயரை பெற்றார். அப்படம் ஃபோக்ஸ்டோன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தச் சூழலில் ஷர்வி அடுத்ததாக பெட்டர் டுமாரோ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

Sharvis Better Tommorrow Movie Got U A Certificate

ஸ்டார்ஸ்: இப்படத்தின் ஹீரோவாகவும் டூ ஓவர் படத்தில் நடித்த மானவ நடித்திருக்கிறார். அவருடன் கௌரி கோபன் நடித்திருக்கிறார். பிரேனா பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் சைலேந்திர சுக்லா தயாரித்தார். குமாரசாமி பிரபாகரன் இசையமைக்க பிஜி வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்கிறார். டூ ஓவர் படம் போல் கண்டிப்பாக இப்படமும் கவனம் ஈர்க்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Sharvis Better Tommorrow Movie Got U A Certificate

மற்ற நடிகர்கள்: மானவ மற்றும் கௌரி கோபனுடன்பாய்ஸ் ராஜன், ஜகதீஷ் தர்மராஜ், சைலேந்திர சுக்லா, ஆர்.ஜி.வெங்கடேஷ், சரவணன், திவ்யா சிவக்குமார், ரூபா ஜெகன், உமாசங்கர், அக்‌ஷய் கார்த்திக், ஆஷா ராணி, புவனா, சிவசுப்ரமணி, ஹர்ஷன், தனுஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Sharvis Better Tommorrow Movie Got U A Certificate

என்ன கதை: ஷர்வி கடைசியாக இயக்கிய டூ ஓவர் படம் குடியால் சீரழியும் ஒருவரை பற்றி பேசியது. பெட்டர் டுமாரோ படமானது அதிர்ச்சியூட்டும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதாவது எம்.டி.எம்.ஏ பார்ட்டி போதைப்பொருளுக்கு அடிமையான ஒருப் எண் வாழ்க்கையையும், அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும் அவரது சகோதரர் பற்றியும் இப்படம் பேசுகிறது.

Sharvis Better Tommorrow Movie Got U A Certificate

யூ/ஏ சான்றிதழ்: இந்நிலையில் பெட்டர் டுமாரோ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சர்ட்டிஃபிக்கேட்டை கொடுத்திருக்கிறது. கண்டிப்பாக இப்படம் சமூக செய்தியையும், போதையின் கோர முகத்தை ரசிகர்களுக்கு சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharvis Better Tommorrow Movie Got U A Certificate

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X