சர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டி திருமணம் நின்றுவிட்டதா? வதந்தியால் குடும்பத்தினர் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : நடிகர் சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியின் திருமணம் நின்றுவிட்டதாக வதந்தி பரவிய நிலையில் குடும்பத்தினர் அதிரடி முடிவை அறிவித்துள்ளனர்.

சர்வானந்த் நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இவர் அண்மையில் கணா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியானது.

sharwanand and rakshita reddy wedding date announcement soon

நடிகர் சர்வானந்த் : தெலுங்கு முன்னணி நடிகரான சர்வானந்த், சாப்ட்வேர் என்ஜினீயரான ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி ஹைதராபாத்தில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த விழாவில், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

sharwanand and rakshita reddy wedding date announcement soon

சித்தார்த்,அதிதிராவ் : நடிகர் சிரஞ்சீவி, ராம் சரண், ஸ்ரீகாந்த், அகில் அக்கினேனி, சித்தார்த், அதிதிராவ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே காதல் கிசுகிசுவில் சிக்கி உள்ள சித்தார்த்தும் அதிதியும் ஜோடியாக இதில் கலந்து கொண்டது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது.

sharwanand and rakshita reddy wedding date announcement soon

திருமணம் நின்றுவிட்டது : இவர்களின் திருமண தேதி விரைவில் அறிவிப்பதாக இருந்த நிலையில், சர்வானந்த்-ரக்ஷிதா ரெட்டி திருமணம், நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவின. தவிர்க்க முடியாத காரணங்களால் திருமணம் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் காட்டுத்தீயாய் பரவியது. இதனால், அதிரடி முடிவு எடுத்த குடும்பத்தினர் கூடிய விரைவில் திருமண தேதி குறித்து முடிவு செய்து அறிவிக்க உள்ளார்கள்.

sharwanand and rakshita reddy wedding date announcement soon

புதிய படத்தில் : ஹைதராபாத் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று, சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி பிரிந்ததாகக் கூறப்படும் செய்தி உண்மை இல்லை என்றும், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சர்வானந்த், தற்போது இயக்குநர் ஸ்ரீராம் ஆதித்யாவின் இயக்கத்தில் தயாராகி வரும் புதியப் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்திற்காக லண்டனில் 40 நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு சில நாட்களுக்கு முன்புதான் வீடு திரும்பினார் என்றும் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X