கர்நாடக பாடகியாக நடிகை நித்யா மேனன்.. பரபர புன்னகையில் ஷர்வானந்த் வெளியிட்ட பர்ஸ்ட் லுக்!
சென்னை: நடிகை நித்யா மேனன் பாடகி லுக்கில் இருக்கும் கமனம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் தயாராகும் படம், கமனம்.
இதில் நடிகை ஸ்ரேயா சரண் ஹீரோயினாக நடிக்கிறார். கொரோனா காரணமாக தற்போது கணவருடன் பார்சிலோனாவில் இருக்கிறார் ஸ்ரேயா.

நடிகை ஸ்ரேயா சரண்
அங்கிருந்தபடி அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அடுத்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறி இருந்தார். இந்நிலையில் கமனம் படத்திலும் அவர் நடித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலுக்கு முன் இதில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

நித்யா மேனன்
நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக இந்தப் படம் உருவாகுகிறது. இந்தப் படத்தில் பாடகி ‘ஷைலாபுத்ரி தேவி' என்ற கேரக்டரில் நித்யா மேனன் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகர் ஷர்வானந்த் இன்று வெளியிட்டார். அழகான புன்னகையுடன் பாடகி லுக்கில் நித்யா மேனன் அந்த போஸ்டரில் தோற்றமளிக்கிறார்.

இளையராஜா
சில தினங்களுக்கு முன்பு ஸ்ரேயா கேரக்டரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அவர் பிறந்த நாளன்று வெளியாகி வரவேற்பை பெற்றது. இயக்குனர் கிரிஷ் இந்த போஸ்டரை வெளியிட்டிருந்தார். இப்போது நித்யா மேனனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருப்பது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
Recommended Video

இறுதிக்கட்ட பணிகள்
ஞானசேகர் வி.எஸ் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷ்தபு ஆகியோருடன் இணைந்து இந்தப் படத்தை அவரும் தயாரிக்கிறார். கமனம் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு கூறியுள்ளது. படத்தின்கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார், சுஜனா ராவ்.


Click it and Unblock the Notifications











