'ப்பா... என்னா நடிப்புங்க, சான்ஸே இல்லை...' ஜானு சமந்தாவை சரமாரியாகப் புகழும் ஹீரோ
Recommended Video
சென்னை: '96' படத்தின் ரீமேக்கில் நடிகை சமந்தாவின் நடிப்பை கண்டு அசந்து விட்டேன் என்று அந்தப் படத்தின் ஹீரோ தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், 96. பிரேம்குமார் இயக்கி இருந்த இதில் விஜய் சேதிபதியும், த்ரிஷாவும் வாழ்ந்திருந்தனர்.
அனைவருடைய காதல் நினைவுகளையும் உலுக்கிய, இவரது கேரக்டர்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது.

கன்னடத்தில்
இந்தப் படம் கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் ஆனது. அங்கு த்ரிஷா நடித்த கேரக்டரில் பாவனாவும் விஜய் சேதுபதி கேரக்டரில் கணேஷூம் நடித்திருந்தனர். எதிர்பார்த்தபடி கவனிக்கப்படவில்லை.

ஷர்வானந்த்
இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி கேரக்டரில் ஷர்வானந் நடிக்கிறார். இவர் தமிழில், காதல்னா சும்மா இல்ல, நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

பிரேம்குமார்
த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடித்து வருகின்றனர். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

ஜானு சமந்தா
இந்தப் படத்துக்கு தெலுங்கில் ஜானு என்று டைட்டில் வைத்துள்ளனர். இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் சமந்தாவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி இருந்தனர். இதுபற்றிய பேசிய சமந்தா, த்ரிஷாவின் சிறப்பான நடிப்பை காப்பி அடிக்கக் கூடாது என்று முதலிலேயே முடிவு செய்துவிட்டேன். அப்படி செய்தால் அது ஒர்க் அவுட் ஆகாதும் என்றும் நினைத்தேன். அதனால் எனது ஸ்டைலில் நடித்தேன் என்று தெரிவித்திருந்தார்.

வாய்ப்பே இல்லை
இந்நிலையில் நடிகை சமந்தாவின் நடிப்பை அவருடன் நடித்துள்ள ஷர்வானந்த் பாராட்டியுள்ளார். அவர் கூறும்போது, சில படங்களில் பார்த்து சமந்தாவின் நடிப்பைத் தெரிந்திருக்கிறேன். ஆனால், அவருடன் நடிக்கும் போதுதான் வியந்தேன். என்ன மாதிரியான நடிகை அவர். வாய்ப்பே இல்லை, அவர் சிறப்பான நடிகை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











