Don't Miss!
- Finance
குழந்தை, வேலை எனது அற்புதமான இரட்டையர்கள்.... எடெல்வீஸ் MD ராதிகா குப்தா!
- News
ஆபரேசன் தாமரை! நேற்று பீகார்.. அடுத்து புதுச்சேரி - பகீர் கிளப்பும் எதிர்க்கட்சித் தலைவர்
- Lifestyle
ஆண்களைப் பற்றிய இந்த ரகசியங்களை பெண்கள் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாதாம்... அது என்னென்ன தெரியுமா?
- Sports
"நீங்களே இப்படி செய்யலாமா".. இந்திய மகளிர் அணி குறித்து கங்குலி போட்ட ட்வீட்.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
சர்வானந்த் ஹீரோவாக நடிக்கும் கணம் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது!
சென்னை: எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த தமிழ் ரசிகர்களுக்கு அதிகமாக பரிச்சயமானவர் நடிகர் சர்வானந்த்
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சர்வானந்த் இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் கணம் என்ற படத்தில் நடித்து வருகிறார்
மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் கணம் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது.

எங்கேயும் எப்போதும்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சர்வானந்த் தமிழிலும் சில படங்களில் நடித்து இங்கும் பிரபலமாக உள்ள குறிப்பாக எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பெரிதும் பரிச்சயமான இவர். எங்கேயும் எப்போதும் படத்தில் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

நேர்த்தியான நடிப்பு
மேலும் இப்போது இவருக்கு தமிழிலும் பல ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பொழுது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதன்படி அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் படத்திற்கு கணம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் இந்த படத்திற்கு ஓகே ஓக ஜீவிதம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.

கணம்
பொதுவாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் இருக்கும். அந்த வகையில் கடைசியாக வெளியான சுல்தான் திரைப்படம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து கணம் திரைப்படத்தை தயாரித்து வருகிறது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒருசேர தயாராகி வருகிறது

அமலா ரீ என்ட்ரி
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரிது வர்மா இதில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மேலும் 90களின் கனவுக்கன்னியான அமலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுத்து கணம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

ஃபர்ஸ்ட் சிங்கிள் "அம்மா சாங்"
இவ்வாறு பல்வேறு அம்சங்களைக் கொண்ட கணம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது அதன் பிறகு அதன்படி குடியரசு தினத்தன்று ஜனவரி 26 ஆம் தேதி கணம் ஃபர்ஸ்ட் சிங்கிள் "அம்மா சாங் " வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்ரீவெண்ணிலா சீதாராம சாஸ்திரியின் வரிகளில் சித்ஸ்ரீராமின் குரலில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு ஜாக்கி பேஜாய் இசை அமைத்துள்ளார்.