twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா, அரசியலில் படுக்கைக்கு அழைப்பதும், செல்வதும் காலகாலமாக உள்ளது: சத்ருகன் சின்ஹா

    By Siva
    |

    Recommended Video

    யாருமே பேசாத டாபிக்கை பற்றி பேசிய கமல்!

    மும்பை: படுக்கைக்கு அழைப்பது கால காலமாக இருந்து வருகிறது. சரோஜ் கான் மற்றும் ரேணுகா சவுத்ரி கூறியதில் தவறு இல்லை என்று நடிகரும், பாஜக எம்.பி.யு.மான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை ஆதரித்து பேசினார் பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான். அரசியலிலும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ரேணுகா சவுத்ரி தெரிவித்தார்.

    இது குறித்து நடிகரும், பாஜக எம்.பி.யு.மான சத்ருகன் சின்ஹா கூறியிருப்பதாவது,

    கோபம்

    கோபம்

    படுக்கைக்கு அழைப்பதும், செல்வதும் சினிமா மற்றும் அரசியலில் உள்ளது. இது கால காலமாக இருந்து வருகிறது. என்னை கவனித்துக் கொண்டால் நான் உன்னை கவனித்துக் கொள்வேன் என்கிற பழக்கம். இதில் கோபப்படுவதற்கு என்ன உள்ளது.

    பாலிவுட்

    பாலிவுட்

    நடிகைகள் ரேகா, மாதுரி தீக்ஷித், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை நல்லபடியாக இருக்க உதவியவர் சரோஜ் கான். அவர் மனதில் பட்டதை பேசக் கூடியவர். பாலிவுட்டில் பெண்கள் படுக்கைக்கு செல்ல வேண்டும் என்று அவர் கூறினால் நடப்பது என்ன என்பது அவருக்கு தெரிந்திருக்கும்.

    நடிகைகள்

    நடிகைகள்

    சரோஜ் மற்றும் ரேணுகா கூறியதை நான் ஏற்கிறேன். படங்களில் நடிக்க பெண்கள் எந்த மாதிரி அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். யார் கண்டால் சரோஜ் கூட கஷ்டப்பட்டிருக்கலாம்.

    உண்மை

    உண்மை

    படுக்கைக்கு அழைப்பது சரி என்று நான் சொல்லவில்லை. அந்த மாதிரியான அட்ஜஸ்ட்மென்ட்டில் நான் இருந்தது இல்லை. உண்மையை பேசியதற்காக சரோஜ்-ஜிக்கு யாரும் கண்டனம் தெரிவிக்க வேண்டாம். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் ஆண்களும், பெண்களும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்ற நிலையை உருவாக்கியவர்களுக்கு கண்டனம் தெரிவியுங்கள்.

    அட்ஜஸ்ட்

    அட்ஜஸ்ட்

    அட்ஜஸ்ட் செய்வதும் செய்யாததும் தனி நபரின் விருப்பம். படுக்கைக்கு வந்தே ஆக வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. உங்களிடம் கொடுப்பதற்கு ஏதாவது இருந்தால் அதை விருப்பம் உள்ளவர்களிடம் கொடுக்கிறீர்கள். இதில் கட்டாயப்படுத்துவது எங்கிருந்து வருகிறது என்று கேட்கிறார் சத்ருகன் சின்ஹா.

    English summary
    Actor turned politician Shatrughan Sinha defended choreographer Saroj Khan. He said that, 'sexual favours are demanded and given. It's an old and time-tested way of getting ahead in life.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X