twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'லட்சுமி' குறும்படம் இருக்கட்டும்... 1 கோடி பார்வைகள் கடந்த இதைப் பார்த்திருக்கிறீர்களா?

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : 'லட்சுமி' குறும்படம் பார்வையாளர்களின் விமர்சனங்களைப் பெற்று பெரும் விவாதத்துக்கு உள்ளானது. இதுவரை 'லட்சுமி' குறும்படம் 30 லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது.

    'பாலியல் சுதந்திரம்' பேசும் 'லட்சுமி' குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதே நேரத்தில் சென்னை ஆதம்பாக்கத்தில் இந்துஜா எனும் ஒரு பெண், தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததால் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக் கொழுத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார் அந்தப் பெண்.

    பெண்களின் பாலியல் சுதந்திரம் பேசப்படும் இந்தச் சூழலிலும் பெண்களுக்கு எதிரான இம்மாதிரியான வன்முறைகள் நாடு முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 'லட்சுமி' உள்ளிட்ட குறும்படங்கள் விமர்சனத்துக்கு உள்ளாவதற்கு முன்பு நாம் முடிவு கட்டவேண்டியது இதற்குத்தான்.

    SHE 2

    SHE 2

    குறும்பட இயக்குநர் சதீஷ் குருவப்பன் இயக்கிய குறும்படங்களில் ஒன்று 'SHE' (Stop Harassment Everywhere). இந்தக் குறும்படம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேசுகிறது. இதன் இரண்டாம் பாகமான 'SHE 2' ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றியது.

    பெண்களின் மீதான வன்முறை

    பெண்களின் மீதான வன்முறை

    கண நேரத்தில் பெண்களின் மீது ஏற்பட்ட வெறுப்பால் ஆசிட் அடிக்கும் இளைஞர்களை நோக்கிக் கேள்வி கேட்கிறது இந்தக் குறும்படம். பெண்களின் மீது வன்முறையைச் செலுத்தும், செலுத்த நினைக்கும் ஆண்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் 'SHE 2'.

    ஆசிட் வீச்சு

    தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணை ஆசிட் அடிக்கப்போய், தவறுதலாகத் தன் தங்கையின் மீதே ஆசிட் அடித்துவிடுகிறார் ஒருவர். ஆசிட் அடிக்க நினைத்த பெண்ணே அவரது தங்கையைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். அவர் குற்றவுணர்வோடு மனம் திருந்துவதாக முடிகிறது படம்.

    ஒரு கோடி பார்வைகள்

    இந்தக் குறும்படம் ஃபேஸ்புக்கில் இதுவரை ஒரு கோடி பார்வைகளைக் கடந்திருக்கிறது. பெண்களைக் காதலுக்குக் கட்டாயப்படுத்தும் ஆண்கள் பலர் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு மனம் மாறியதாகச் சொல்லியிருக்கிறார்களாம்.

    பாதிக்கப்பட்ட பெண்கள்

    பாதிக்கப்பட்ட பெண்கள்

    குறும்படத்தின் முடிவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களைக் காட்டுகிறார்கள். காதலின் பெயரால் கோரமாக்கப்பட்டிருக்கும் முகங்களால், ஆண்களை வெட்கித் தலைகுனியச் செய்கிறது இந்தக் குறும்படம். விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் குறும்படம் அதன் நோக்கத்தை நிறைவேற்ற வாழ்த்துகள்.

    இயக்குநர் சதீஷ் குருவப்பன் அவர்களைத் தொடர்பு கொள்ள :

    https://www.facebook.com/SatheshGuruvappan/

    www.SatheshGuruvappan.com

    English summary
    'SHE 2' is a short film about violence my men on women. This short film asks the questions to who hit the acid with hatred on women.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X