வரலட்சுமியை சூப்பர் வுமனாக இவர்தானாம்... அப்போ ராதிகா..?
சென்னை : சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி தன்னைப் பெற்ற அம்மாவின் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்துக் கூறியுள்ளார். 'எனது உலகத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்' எனக் குறிப்பிட்டுள்ளார் வரலட்சுமி.
'அரைகுறைப் பெண்ணாக இருந்த என்னை சூப்பர் வுமனாக மாற்றியது நீங்கள்தான். வார்த்தைகளால் வெளிப்படுத்துவதை விட அதிகமாக உங்களை நேசிக்கிறேன் அம்மா.' எனக் கூறியுள்ளார் வரலட்சுமி.

வரலட்சுமியின் அம்மா சாயாவின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் வரலட்சுமி. சரத்குமாருக்கும், சாயாவுக்கும் 1985-ம் ஆண்டு பிறந்தவர் வரலட்சுமி. ஆனால், இப்போது ராதிகாவுடன்தான் வசித்து வருகிறார் வரலட்சுமி.
அவர் பகிர்ந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சிலர், 'அப்போ ராதிகா உங்க அம்மா இல்லையா?' என ரிப்ளை மூலம் கேட்டிருக்கின்றனர். வரலட்சுமி இப்போது 'சக்தி' உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











