அவ தற்கொலை செஞ்சிருக்க மாட்டா.. சுஷாந்த் சிங் மேனேஜர் திஷா மரணத்தில் பெற்றோர்கள் திடீர் சந்தேகம்

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவரது முன்னாள் மேனேஜர் திஷா தற்கொலையில் திஷாவின் பெற்றோர்களுக்கு திடீர் சந்தேகம் ஒன்று எழுந்து இருக்கிறது.

Recommended Video

Sushant Singh case Complications • Final Details

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அவரது முன்னாள் மேனேஜர் திஷா சலியான், மும்பையில் உள்ள தனது அப்பார்ட்மென்ட் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

அவரது இறப்புக்கு நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் இரங்கல் தெரிவித்து இருந்தார். பின்னர், அவரும் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை கிளப்பியது.

திஷா சலியான் தற்கொலை

திஷா சலியான் தற்கொலை

பாலிவுட் நடிகர்களின் ஃபேவரைட்டான மேனேஜராக இருந்து வந்த திஷா சலியான், கடந்த ஜூன் 8ம் தேதி திடீரென தனது அப்பார்ட்மென்ட் மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தார். அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சுஷாந்த் சிங் ராஜ்புத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

அடுத்த வாரமே அதாவது ஜூன் 14ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என மும்பை போலீசார் தெரிவித்தனர். மேலும், மன அழுத்தம் காரணமாக அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் சூசைட் நோட் எதுவும் கிடைக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பந்தம் இல்லை

சம்பந்தம் இல்லை

மேனேஜர் திஷா சலியான் தற்கொலைக்கும், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்கிற கோணத்தில் செய்திகள் பரவிய நிலையில், மும்பை போலீசார் அவசர அவசரமாக அந்த தற்கொலைக்கும், இதற்கும் தொடர்பு இல்லை என அறிவித்தனர். அதன் பின்னர், பாலிவுட் நெப்போடிசம் காரணம் என்றும், காதலி ரியா சக்கரவர்த்தி மீதும் சுஷாந்த் சிங் ராஜ்புத் ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் குற்றம்சாட்ட ஆரம்பித்தனர்.

தற்கொலையாக இருக்காது

தற்கொலையாக இருக்காது

இந்நிலையில், திஷா சலியானின் பெற்றோர்கள், தற்போது தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டிருக்க மட்டார் என்ற புதிய சந்தேகத்தை கிளப்பி உள்ளனர். மேலும், அது ஒரு விபத்தாக நடந்திருக்கலாம் என்றும் எங்கள் மகள் மாடியில் அமர்ந்து இருந்த போது தவறுதலாக விழுந்திருக்கலாம், அவரது தற்கொலைக்கு எந்த காரணமும் இல்லாத நிலையில், அவள் எப்படி தற்கொலை செய்து கொள்வார் என மும்பை போலீசாரிடம் தற்போது தெரிவித்துள்ளார்களாம்.

தற்போது ஏன்

தற்போது ஏன்

கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழித்து, தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், திஷா சலியானின் பெற்றோர்கள், அவர்களது மகள் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும், அது ஒரு விபத்தாக இருக்கலாம் என்றும் கூற காரணம் ஏன் என்ற சந்தேகம் கிளம்பி இருக்கிறது. இதுவும் மும்பை போலீசாரின் வேலையா? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் முன்வைத்து வருகின்றனர். சுஷாந்த் சிங் மரணமும், திஷா சலியானின் மரணமும் மர்மமாக இருக்கும் நிலையில், உண்மை என்ன என்பதை சிபிஐ தீர விசாரித்து கூற வேண்டும் என்பதே பலரது கோரிக்கை.

பாலிவுட் நடிகர் மறுப்பு

பாலிவுட் நடிகர் மறுப்பு

திஷா சலியானின் தற்கொலையில் சம்மந்தப்பட்டிருக்கும் இன்னொரு பாலிவுட் நடிகரான சூரஜ் பஞ்சோலி, தனது வாழ்க்கையில் திஷா சலியானை ஒரு முறை கூட தான் சந்தித்தது இல்லை என்றும், தான் ஒரு பெண்ணுடன் பார்ட்டி செய்வதாக வைரலாகும் புகைப்படம், 2016ம் ஆண்டு எடுத்தது. அந்த பெண் திஷா அல்ல, எனது தோழி, தற்போது அவர் வெளிநாட்டில் வசிக்கிறார் என இன்னொரு பரபரப்பையும் கிளப்பி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X