Rekha Nair - காட்டுக்குள் கூட போவேனே ஒழிய அந்த வீட்டுக்குள் போகமாட்டேன்.. ரேகா நாயர் அதிரடி

சென்னை: Rekha Nair (ரேகா நாயர்) பிக்பாஸ் சீசன் 7ல் ரேகா நாயர் பங்கேற்கிறார் என்று தகவல் வெளியான சூழலில் அதுகுறித்து அவர் பேசியிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவரை 6 சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. எந்த சீசனிலும் இல்லாத அளவு கடந்த சீசனில் சண்டை, சச்சரவுகளும்; எந்த சீசனுக்கும் இல்லாத பேச்சும் அந்த சீசனுக்கு எழுந்தது. அதற்கு காரணம் இதில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள். குறிப்பாக, விக்ரமன், அசீம், ஷிவின்.

She has spoken about Rekha Nairs participation in Bigg Boss season 7

பிக்பாஸ் 6 சச்சரவுகள்: கடந்த சீசனில் ஜிபி முத்து, தனலட்சுமி, அசீம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன் உள்ளிட்ட 20 பேர் கலந்துகொண்டனர். சீசன் ஆரம்பித்த சில வாரங்களிலேயே தனது மகனின் உடல்நிலையை காரணம் காட்டி ஜிபி முத்து தாமாகவே வெளியேற பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஜிபி முத்து பக்கா எண்டெர்டெயினர் அவர் வெளியேறிவிட்டால் சீசன் பிக்கப் ஆகுமா என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கே இருந்தது. ஆனால் அவர் வெளியேறிய பிறகுதான் சீசன் களைகட்ட தொடங்கியது.

முற்றிப்போன சண்டை: எப்போதும் பிக்பாஸில் சச்சரவுகள் வருவது இயல்புதான். ஆனால் கடந்த சீசனில் அசீம், தனலட்சுமி, அமுதவாணன், ஜனனி, விக்ரமன், ஷிவின் என பலரது பேச்சும், செயல்பாடுகளும் பார்வையாளர்களிடையே பெரும் விவாதமாகவே மாறிப்போனது. தினமும் தகராறு என ரகளையாக நகர்ந்தது அந்த சீசன். இதனால் பலரும் விரும்பி பார்க்க தொடங்கினர். இறுதியில் அசீம் டைட்டிலை தட்டி செல்ல விக்ரமன் இரண்டாவது இடத்தையும் ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

பிக்பாஸ் : இந்தச் சூழலில் பிக்பாஸ் ஏழாவது சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழ ஆரம்பித்திருந்தது. அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக சமீபத்தில் அதற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டது. அதில் கமல் ஹாசன் இடம்பெற்றிருந்தார். மேலும் இந்த சீசனில் இரண்டு வீடுகள் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது அக்டோபர் முதல் வாரத்திலிருந்து தொடங்கலாம் என கூறப்படுகிறது.

ரேகா நாயர்: பிக்பாஸ் 7ல் ரேகா நாயர் பப்லு ப்ரித்விராஜ், ரச்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ்உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்தத் தகவல் குறித்து ரேகா நாயர் விளக்கமளித்திருக்கிறார். ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசிய அவர், "பிக்பாஸ் வீட்டுக்குள் எதற்காக நான் போக வேண்டும். என்னை ஒரு காட்டுக்குள் போய் இருக்க சொன்னால்கூட அங்கு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இருப்பேன். ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் போகமாட்டேன்.

மூன்று சீசன்கள்: பிக் பாஸில் நான் கலந்துகொள்ளப்போவதாக கடந்த மூன்று சீசன்களாக சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களை எல்லாம் விட்டுவிடுங்கள். முதலில் அங்கு போக எனக்கு விருப்பம் வேண்டுமல்லாவா. நூறு நாட்கள் போய் அந்த வீட்டுக்குள் இருப்பதற்கு பதிலாக நூறு மரங்கள் வைக்கலாம். அங்கு போவதற்கு எனக்கு கொஞ்சமும் ஈடுபாடு இல்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X