கெரியருக்காக என்னை காதலித்து யூஸ் பண்ணி, கழற்றிவிட்டார்: டிவி நடிகை மீது நடிகர் புகார்
மும்பை: பிக் பாஸ் பிரபலம் தனது கெரியருக்காக தன்னை பயன்படுத்திக் கொண்டதாக தொலைக்காட்சி நடிகர் மனிஷ் நாக்தேவ் தெரிவித்துள்ளார்.
சல்மான் கான் நடத்தும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனில் கலந்து கொண்டவர் இந்தி டிவி சீரியல் பிரபலமான ஸ்ரிஷ்டி ரோட். அவரும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மனிஷ் நாக்தேவும் காதலித்தனர். இந்நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
ஸ்ரிஷ்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த உடனேயே அவர்களின் காதல் முறிந்தது.

காரணம்
அந்த காதல் முறிவுக்கு நடிகர் ரோஹித் சுசான்டி தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் தங்கள் காதல் முறிவுக்கு மூன்றாவது நபர் யாரும் காரணம் இல்லை என்று தெரிவித்தார் மனிஷ். மூன்று ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த மனிஷுக்கும், ஸ்ரிஷ்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் கூட நடந்தது. இந்நிலையில் அவர்கள் பிரிந்தனர்.

பெண்கள்
காதல் முறிவு குறித்து அமைதியாக இருந்த மனிஷ் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, பெண்களை போன்று ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளது. அடுத்தவர்களின் உணர்ச்சிகள், பாசத்துடன் விளையாட ஆணோ, பெண்ணோ யாருக்கும் உரிமை இல்லை. அடுத்தவர்களின் காதலை சாதகமாக பயன்படுத்திக் கொள்பவர்கள் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அது மற்றவர்களை காயப்படுத்துகிறது.

காதல்
தங்களின் கெரியர் மற்றும் தனிப்பட்ட விஷயங்களுக்காக அடுத்தவர்களை பயன்படுத்துபவர்கள் உள்ளனர். அவர்களுக்கு தங்களின் வேலை, உறவுகள், உணர்ச்சிகள் மட்டுமே முக்கியம். நான்கு ஆண்டுகள் காதலித்த பிறகு போன் செய்து எல்லாம் முடிந்துவிட்டது என்றார். இது குறித்து நாம் நேரில் சந்தித்து பேசுவோமா என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது, என் கெரியரின் உச்சத்தில் உள்ளேன். இனியும் இந்த உறவில் இருக்க விரும்பவில்லை. இதில் இனி பேசுவதற்கு என்ன உள்ளது? என்று கேட்டார். அவர் கூறியதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

ஸ்ரிஷ்டி
திருமணம் நிச்சயமான நேரத்தில் எப்படி போன் செய்து உறவை முறித்துக் கொள்ள முடியும். அந்த போன் காலுக்கு பிறகு அவர் என்னை தொடர்பு கொள்ளவே இல்லை. இத்தனை ஆண்டுகள் பழகியதற்காகவாவது நேரில் சந்தித்து பேசியிருக்கலாம் அல்லவா?. அவரின் கெரியருக்காக என்னை பயன்படுத்திக் கொண்டுவிட்டார். என் உணர்ச்சிகளுடன் விளையாடி, என் நெட்வொர்க்கை அவரின் வெற்றிக்காக பயன்படுத்தியுள்ளார் என்கிறார் மனிஷ்.


Click it and Unblock the Notifications











