நெகட்டிவ் கேரக்டர் இருக்கா? காமெடியன் யோகிபாபுவுக்கு நான்தான் ஜோடி.. 'அழகிய தமிழ் மகள்' ஹேப்பி!
சென்னை: யோகிபாபு ஜோடியாக நடித்துள்ளேன் என்று டூ லெட் பட நாயகி ஷீலா ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
'அழகிய தமிழ் மகள்' சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷீலா ராஜ்குமார்.
இதற்கு முன்பே, இவர் நடித்திருந்த 'டூ லெட்' படம் சர்வதேச பட விழாக்களில் விருதுகளை அள்ளியது.

கும்பளங்கி நைட்ஸ்
தியேட்டர்களில் வெளியான பின்னும் படத்திற்கும், அதில் நடித்த ஷீலா ராஜ்குமாருக்கும் பாராட்டுகள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார் ஷீலா. மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த 'கும்பளங்கி நைட்ஸ்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆறு படங்கள்
சிறந்த படத்திற்கான கேரள அரசு விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. இதுபற்றி ஷீலா ராஜ்குமார் கூறும்போது, தற்போது ஆறு படங்களில் நடித்து வருகிறேன். அதில் இரண்டு படங்கள் லாக்டவுனுக்கு முன்பே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. இன்னும் நான்கு படங்களின் படப்பிடிப்புகள் இப்போதுதான் ஆரம்பித்துள்ளன.

யோகிபாபு ஜோடி
ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் பாலாஜி மோகன் இணைந்து தயாரித்துள்ள மண்டேலா படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். கிரைம் த்ரில்லராக கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் வாஞ்சை படத்திலும் நாயகியாக நடித்துள்ளேன்.
ரசிகர்கள் என்னை பக்கத்து வீட்டு பெண் போல எதார்த்தமாக இருக்கிறீர்கள் எனக் கூறுகின்றனர்.

பதியும் விதமாக
எனது கதாபாத்திரங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். மண்டேலா படத்தில் யோகிபாபுவின் காமெடி பிரதானமாக இருந்தாலும், எனது கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் பதியும் விதமாக தனித்துவமாக உருவாகியிருக்கிறது என்கிறார்.

கமர்சியல் ஆசை
'நான் கதையின் நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்பதில்லை. எந்த குறுகிய வட்டத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ள விருப்பமில்லை. எனக்கு நன்றாக நடனம் ஆட தெரியும். கமர்சியல் படங்களில் நடிக்கும் ஆசை இருக்கிறது. நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும் ஆசையும் இருக்கிறது' என்று மேலும் கூறுகிறார் ஷீலா.


Click it and Unblock the Notifications











