»   »  ராஜ்யஸ்ரீ நகையை மீட்டது போல எனது ரூ 37 லட்சம் நகைகளையும் மீட்டுக் கொடுங்க! - நடிகை ஷீலா

ராஜ்யஸ்ரீ நகையை மீட்டது போல எனது ரூ 37 லட்சம் நகைகளையும் மீட்டுக் கொடுங்க! - நடிகை ஷீலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மூத்த நடிகை ராஜ்யஸ்ரீயின் நகைகளை மீட்டுத் தந்தது போல, களவு போன எனது ரூ 37 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் போலீசார் மீட்டுத் தர வேண்டும் என்று பழம்பெரும் நடிகை ஷீலா கோரிக்கை விடுத்துள்ளார்.

தி நகரில் நகைக்கடையில் இருந்து நடிகை ராஜ்யஸ்ரீயிடமிருந்து ரூ 15 லட்சம் மதிப்புள்ள நகைகளை ஒரு நபர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டான். உடனடியாக இதுகுறித்து போலீசில் புகார் செய்தார் ராஜ்யஸ்ரீ. புகார் செய்த இரண்டு நாட்களில் கொள்ளைக்காரனைப் பிடித்த போலீஸ், நகைகள் அனைத்தையும் மீட்டது.

Sheela urges police to find out her Rs 37 lakh jewels

இந்த விஷயம் கேள்விப்பட்ட நடிகை ஷீலா, தன் வீட்டிலும் ரூ 37 லட்சம் நகைகள் களவு போனதாகவும் அதையும் போலீசார் மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ராஜ்யஸ்ரீயின் நகைகளை போலீசார் பத்திரமாக மீட்டுக் கொடுத்ததை அறிந்து மகிழ்ந்தேன்.

என் வீட்டிலும் என் படுக்கை அறையில் வைத்திருந்து ரூ 37 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துவிட்டனர்.

ஜார்ஜ் கமிஷனராக இருந்தபோது, நான் அவரை சந்தித்து எனது வீட்டில் திருட்டு நடந்தது பற்றி புகார் கொடுத்தேன். உடனே அவர் வழக்கு போடச்சொல்லி உத்தரவிட்டார்.

வழக்குப்பதிவு செய்து, தினமும் போலீசார் என் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் நகைகள் கிடைக்கவில்லை.

என் வீட்டில் நடந்த திருட்டு பற்றி மீடியாவில் பெரிதாக செய்தி வரவில்லை. போலீசார் கண்டுபிடித்துத் தருவார்கள் என்பதால் நானும் அமைதியாக இருந்தேன்.

போலீசார் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. நான் கஷ்டப்பட்ட சம்பாதித்த நகைகள் இவை. பறிகொடுத்துவிட்டுத் தவிக்கிறேன்," என்றார்.

English summary
Actress Sheela has urged the police to find out her Rs 37 lakh worth jewels robbed by somebody from her house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil