சிபிஐ விசாரணை தேவை.. அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நடிகர்.. டிரெண்டாகும் #justiceforSushantforum
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையில், மர்மம் நீடிப்பதாகக் கூறி, சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகர் சேகர் சுமன் #justiceforSushantforum என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்.
Recommended Video
கடந்த ஜூன் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாலிவுட்டை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே அவரது மரணம் கடந்த 10 நாட்களாக உலுக்கி எடுத்து வருகிறது.

பிரேத பரிசோதனையில்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவரை கொலை செய்தனரா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் கிளம்பிய நிலையில், பிரேத பரிசோதனையில் அவர் தூக்கிட்டுத் தான் தற்கொலை செய்துக் கொண்டார் என தெரிவிக்கப்பட்டது.

இது தான் காரணம்
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு காதல் தோல்வி காரணமாக இருக்கலாம் என்றும், இல்லை இல்லை பாலிவுட்டில் நிலவி வரும் வாரிசு அரசியலான நெபொடிசம் தான் முழு முதற் காரணம், சுஷாந்த் சிங்கை சல்மான் கான், கரண் ஜோஹர், ஆலியா பட், சோனம் கபூர் உள்ளிட்டோர் தான் கொன்று விட்டனர் என ஏகப்பட்ட கொந்தளிப்பு நெட்டிசன்கள் மத்தியில் இருந்து கிளம்பின.

சிபிஐ விசாரணை
நெட்டிசன்கள், ரசிகர்கள் மட்டுமின்றி, சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் பல பிரபலங்களும், அவருக்கு ஆதரவாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர். பிரபல நடிகரான சேகர் சுமன் தற்போது #justiceforSushantforum என்ற அமைப்பை உருவாக்கி சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

கரண் ஜோஹர் நிகழ்ச்சி நிறுத்தம்
பாலிவுட்டில் நெபோடிசத்தை அதிகமாக ஆதரித்து வருவது கரண் ஜோஹர் தான் என்றும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு அவர் தான் காரணம் என்றும் அவரது உருவ பொம்மைகள் வரை சமீபத்தில் எதிர்த்து தங்களின் எதிர்ப்பை காட்டினர். இந்நிலையில், வெறுப்பு உணர்வுகளை உமிழும் காபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதே நமக்கு கிடைத்த முதல் வெற்றி என சில ரசிகர்கள் டிவீட் போட்டு வருகின்றனர்.

மறந்துடுவாங்கன்னு நினைச்சேன்
மற்ற நடிகர்களை போல சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து அவரை 2 அல்லது மூன்று நாட்களில் மக்கள் மறந்துவிட்டு, தங்கள் வேலைகளை கவனிக்க போயிடுவாங்கன்னு நினைச்சேன். ஆனால், பாலிவுட்டில் தலை விரித்தாடும் பிரச்சனைக்கும், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கும் நீதி கேட்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது என ஒரு ரசிகை டிவீட் போட்டிருக்கிறார்.

34 ஆயிரம் பேருக்கு உணவு
இந்த கொரோனா காலத்தில் வறுமையில் பசியால் வாடும் 34 ஆயிரம் குடும்பங்களுக்கு, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து, அவர் நினைவாக இயக்குநர் அபிஷேக் உணவு வழங்கி உள்ளார். சுஷாந்தின் அறிமுகப்படமான கை போ சே மற்றும் கேதார்நாத் படங்களை இயக்கிய அவர், சுஷாந்த் சிங் நலனில் மிகவும் அக்கறை காட்டியது குறிப்பிடத்தக்கது.

மருத்துவருக்கு தொடர்பு
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்கரபோர்த்தி உடன் பாலிவுட் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகை ஆலியா பட்டின் அப்பா மகேஷ் பாட் இருந்த புகைப்படங்கள், சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பின. இந்நிலையில், சுஷாந்த் சிங்குக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் மற்றும் மகேஷ் பட், கல்லூரி நண்பர்கள் என்ற தகவல் ஒன்றும், சுஷாந்த் உயிரிழப்பில் மருத்துவருக்கும் தொடர்பு இருப்பதாக நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர். விரைவில் சிபிஐ விசாரணை அமைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











