பொண்ணு ரெடி.. மாப்பிள்ளை எங்கே? தழைய தழைய பட்டுப்புடவையில் மணப்பெண் கோலத்தில் சிவக்கும் ஷெரின்!
சென்னை: நடிகை ஷெரின் மணப்பெண் கோலத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
கன்னட நடிகையான ஷெரின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து ஜெயா, ஸ்டுடன்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வரலக்ஷ்மி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஒரு பாடலுக்கு ஆடி..
திறமையான நடிகையாக இருந்த போதும் ஷெனுரினுக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

நண்பேன்டா
தமிழ், கன்னடம் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார் ஷெரின். கடைசியாக 2015ஆம் ஆண்டு வெளியான நண்பேன்டா படத்தில் நடித்திருந்தார் ஷெரின்.

மூன்றாவது ரன்னர் அப்
அதன்பிறகு பட வாய்ப்புகள் எதுவும் கிட்டாததால் கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் இறுதி வரை சென்ற ஷெரின் மூன்றாவது ரன்னர் அப் ஆனார்.

கமிட்டாகவில்லை
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகாவது பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார் ஷெரின். இதற்காக விதவிதமாக போட்டோ ஷூட்டுக்களையும் நடத்தி வந்தார். ஆனால் எந்தப் படத்திலும் கமிட்டானதாக தெரியவில்லை.

தழைய தழைய பட்டுப்புடவை
இந்நிலையில் ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷெரின் மணப்பெண் கோலத்தில் தழைய தழைய பட்டுப்புடவையில் வெட்கத்தில் சிவந்து போயுள்ளார்.

குலுக்கலாக ஆட்டம்
கன்னத்தில் கை வைத்தப்படி சேரில் அமர்ந்திருக்கும் ஷெரின், பொண்ணு ரெடி மாப்பிள்ளை எங்கே என்று கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். அதே கெட்டப்பில் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ள ஷெரின், மயில் இறகை முதுகில் குலுக்கலாக ஒரு ஆட்டம் ஆடியுள்ளார்.
பொண்ணுக்கு பாட தெரியுமா?
ஷெரினின் இந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் பொண்ணுக்கு பாட தெரியுமா என்று பெண் பார்க்கும் படலத்தின் சம்பிரதாய கேள்விகளை கேட்டு வருகின்றனர். ஷெரினின் இந்த வீடியோக்களும் போட்டோக்களும் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











