“மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின்

இசைத்துறையில் தான் தனது பயணம் இருக்கும் என நடிகை ஷெரின் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Bigg Boss Kondattam : Sherin Tharsan Dance : குத்தாட்டம் போடும் கண்மணிகள்

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்படுத்தி கொடுத்துள்ள நல்ல பெயரை அடுத்து, தான் என்ன செய்யப் போகிறேன் என்பது குறித்து நடிகை ஷெரின் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அனைவரும் வெற்றி கொண்டாட்டத்திற்காக தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். இதற்காக தினந்தோறும் நடைபெறும் நடன ஒத்திகையில் அவர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது இடம் பிடித்த நடிகை ஷெரின், சாக்ஷியுடன் சேர்ந்து ஒத்திகைகளில் பங்கேற்று வருகிறார். இருவரும் சேர்ந்து தான் ஊர் சுற்றி வருகிறார்கள்.

ஷெரின் பேட்டி

ஷெரின் பேட்டி

இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு நடிகை ஷெரின் பேட்டி கொடுத்துள்ளார். அதில் தான் அடுத்து படங்களில் நடிக்கப் போவதில்லை என அவர் கூறியுள்ளார். மேலும் தர்ஷன் வெளியேறியபோது தான் குற்ற உணர்ச்சியில் தவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்ற உணர்ச்சி

குற்ற உணர்ச்சி

இதுகுறித்து ஷெரின் அளித்துள்ள பேட்டியில், "பிக் பாஸ் பைனல்ஸ்க்கு நான் போகிறேனோ இல்லையோ, நிச்சயம் தர்ஷன் போவார் என நினைத்திருந்தேன். தர்ஷன் தான் டைட்டில் வெல்வார் என்றும் நம்பினேன். ஆனால் அவர் கடைசி வாரம் வெளியேறியது அதிர்ச்சியாக இருந்தது. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. தர்ஷனின் வெளியேற்றத்தால் நான் குற்ற உணர்ச்சியில் தவித்தேன்", என கூறியுள்ளார்.

லேபிள் வேண்டாம்

லேபிள் வேண்டாம்

மேலும், " என்னை பொறுத்த வரை தர்ஷனுக்கும், எனக்கும் இடையேயான உறவுக்கு எந்த பெயரும் கிடையாது. வனிதா அதனை அஃபேர் என சொன்ன போது அதனால் தான் கோபப்பட்டேன். எங்கள் உறவுக்கு ஒரு லேபிள் ஒட்டப்படுவதை நான் விரும்பவில்லை.

எமோசனல் ரோலர் கோஸ்டர்

எமோசனல் ரோலர் கோஸ்டர்

பிக் பாஸ் வீட்டில் இருந்த 100 நாட்களும் ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர் பயணம் மாதிரி தான் இருந்தது. சில சமயம் யாருமே இல்லாமல், நாம் தனியாக இருப்பது போல் உணர்வோம். அடுத்த சில மணி நேரத்தில் நம்மை சுற்றி பலர் இருப்பார்கள்.

ஆர்வமில்லை

ஆர்வமில்லை

நான் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்ததே ஏதாவது கிரியேட்டிவ் வேலைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இப்போது இசை கற்றிருக்கிறேன். டிஜே பயிற்சி பெற்றுள்ளேன். இந்த பாதையில் பயணிக்கத் தான் விரும்புகிறேன். மீண்டும் நடிப்பதில் ஆர்வமில்லை.

இது தான் ஆசை

இது தான் ஆசை

எனவே நான் மீண்டும் நடிப்பேனா இல்லையா என்பது தெரியாது. அது எனக்கு வரும் படங்களை பொறுத்து இருக்கிறது. சும்மா ஒரு பொம்மை போல் படத்தில் வந்துவிட்டு போக எனக்கு விருப்பமில்லை. எனது கிரியேட்டிவிட்டியை மதிக்கும் நபர்களுடன் வேலை செய்யவே விரும்புகிறேன்", என ஷெரின் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X