தமிழில் பேட் கேர்ளாக கவர்ச்சி காட்டும் ஷெர்லின் சோப்ரா!
சர்சைக்குரிய மாடல் அழகி மற்றும் நடிகையுமான ஷெர்லின் சோப்ரா தமிழில் நடிக்கும் படத்துக்கு பேட் கேர்ல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஷெர்லின் சோப்ரா பற்றி பாலிவுட்டில் தினமும் ஏக செய்திகள் வருகின்றன. இத்தனைக்கும் இவர் நடித்தவை டைம் பாஸ், கேம், ரெட் சுவஸ்டிக் என சில படங்கள்தான். தற்போது அவர் காமசூத்ரா என்ற 3டி படத்தில் நடித்து வருகிறார்.

பேட் கேர்ள்
ஷெர்லின் சோப்ரா 2002ல் தமிழில் யுனிவர்சிடி என்ற படத்தில் நடித்துள்ளார், அதன் பிறகு அவருக்கு தமிழில் பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. தற்போது ஷாஜியம் இயக்கும் பேட் கேர்ள் (Bad Girl) என்ற படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாளத்தில் நடிக்கிறார்.

ஷெர்லின் சோப்ரா
இது மாடலின் ஆக இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதை என்பதால் அந்த துறையில் இருப்பவர்கள் நடித்தால் கதைக்கு இன்னும் பக்கபலமாக இருக்கும் என்பதால் தான் ஷெர்லின் சோப்ராவை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீமுரளி
இதற்கு ஸ்ரீமுரளி என்பவர் இசை அமைக்கிறார், இவர் 2500க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு இசை ஜாம்பவான்களான எம்.எஸ்.வி, இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களிடம் கீ போர்டு வாசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி - போஜ்புரியிலும்...
இதை பெங்களுரை சேர்ந்த ஷா ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் ஹிந்தி, தெலுங்கு, போஜ்புரி மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தும் வெளியிட போவதாக இயக்குனர் ஷாஜியம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











