மோடியுடன் திடீர் சந்திப்பு... பாஜகவில் ஐக்கியமாகிறாரா ரஜினியின் நண்பர் மோகன்பாபு?
ஐதரபாத்: பிரபல தெலுங்கு நடிகரும் ரஜினிகாந்தின் நண்பருமான மோகன்பாபு பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு, தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது, சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த்தின் நண்பரான இவர், கடந்த தேர்தலில் ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பிரதமருடன் சந்திப்பு
இந்நிலையில் நடிகர் மோகன்பாபு தனது மகன் நடிகர் விஷ்ணு, மகள் நடிகை லட்சுமி ஆகியோருடன் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.

பிரதமர் அழைப்பு
பாஜகவில் சேர்வதற்காகத்தான் அவர் அங்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பாஜவில் சேர, மோகன்பாபுவுக்கு பிரதமர் அழைப்பு விடுத்ததாகவும் இதை மோகன்பாபு ஏற்றுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாயின.

அமைச்சர் அமித் ஷா
இதையடுத்து அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினார். அவரும் மோகன்பாபுவை பாஜகவுக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது.

தெரிவிக்க இயலாது
இந்த சந்திப்புக்குப்பின், பாஜகவில் இணைவது குறித்து பேச்சு நடத்தத்தான் பிரதமர் மற்றும் அமித்ஷாவை சந்தித்தீர்களா? என்று மோகன்பாபுவிடம் கேட்டபோது, இப்போது எதையும் தெரிவிக்க இயலாது என்றார்.
மோகன்பாபு பாஜகவில் சேரப்போவதாக வந்துள்ள செய்தி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











