ஏகே 62ல் இணையும் பிரபல கராத்தே மாஸ்டர்... ஆரம்பமே அதிரடியா இருக்கே!

சென்னை : நடிகர் அஜித்தின் வலிமை படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் -போனி கபூர் கூட்டணியில் அவர் தற்போது ஏகே61 படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கில் அவர் இணையவுள்ள நிலையில், அடுத்ததாக அவரது நடிப்பில் ஏகே 62 படம் இந்த ஆண்டின் இறுதியில் துவங்கவுள்ளது.

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

நடிகர் அஜித் எப்போதுமே தனது கேரியரை பெஸ்டாக கொடுக்கும் எண்ணம் உள்ளவர். தன்னுடைய படங்களை சிறப்பாக கொடுக்க இவரது பிரயத்தனங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். ஸ்டண்ட் காட்சிகளில் ஒரிஜினலாக நடித்து வருபவர் அஜித். இதையடுத்து இந்தக் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்து வருகின்றன.

நேர்கொண்ட பார்வை படம்

நேர்கொண்ட பார்வை படம்

நேர்கொண்ட பார்வை படத்தில் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் இணைந்திருந்தார் அஜித். இந்தப் படத்தில் வழக்கறிஞராக இவர் நடித்திருந்த கதாபாத்திரம் சிறப்பாக அமைந்திருந்தது. பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் அமைந்தது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஆயினும் ரசிகர்கள் அஜித்திடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் இந்தப் படத்தில் குறைவாகவே இருந்தது. இதையடுத்து அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 24ம் தேதி வெளியானது வலிமை. இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பைக் ரேசிங் காட்சிகள்

பைக் ரேசிங் காட்சிகள்

அதிகமான ஸ்டண்ட் மற்றும் பைக் ரேசிங் காட்சிகளுடன் இந்தப் படம் வெளியான நிலையில் திரையரங்குகளில் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாட்டத்துடன் எதிர்கொண்டனர். தற்போது இந்தப் படம் 25வது நாளை பூர்த்தி செய்துள்ளது. இதையடுத்து தற்போது ஏகே62 படத்தின் அறிவிப்பும் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.

ஏகே62 பட அறிவிப்பு

ஏகே62 பட அறிவிப்பு

இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தின் சூட்டிங் இந்த ஆண்டின் இறுதியில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. நயன்தாரா படத்தில் அஜித்தின் ஜோடியாகலாம் என்று கூறப்படுகிறது.

படத்தில் இணையும் கராத்தே மாஸ்டர்?

படத்தில் இணையும் கராத்தே மாஸ்டர்?

இந்நிலையில் படத்தின் புதிய தேர்வாக பிரபல கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் அஜித்திற்கு வில்லனாக படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஷிஹான் ஹுசைன் பதிவு

ஷிஹான் ஹுசைன் பதிவு

இன்று காலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவனுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த ஷிஹான் ஹுசைன் ஏகே62 படத்தில் தான் இணையவுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் தொடர்ந்து அந்த பதிவை அவர் நீக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X