கொரோனாவில் உதவிய நடிகைக்கு திடீர் பக்கவாதம்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மும்பை: கொரோனா நோயாளிகளுக்கு தன்னார்வலராக பணியாற்றிய நடிகை ஷிகாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை ஷிகா மல்ஹோத்ரா, இந்தியில் காஞ்ச்லி லைஃப் இன் எ ஸ்லாஹ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.
இதில் சஞ்சய் மிஸ்ரா நாயகனாக நடித்திருந்தார். தெடிப்பியா ஜோஷி இயக்கி இருந்த இந்தப் படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது.

தன்னார்வ நர்ஸ்
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு உதவ மற்றும் சிகிச்சை அளிக்க தன்னார்வலராக பலர் பணியாற்ற முன் வந்தனர். அதில் ஒருவர் ஷிகா. மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தன்னார்வ நர்ஸாக இணைந்தார்.

அம்மாவும் நர்ஸ்
நர்ஸிங்கில் பட்டப்படிப்பு முடித்த ஷிகா, பின்னர் நடிகையானார். இவர் அம்மாவும் நர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் கொரோனா வார்டுகளில் பணிபுரிந்து வந்த நடிகை ஷிகாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மதிப்பிட வேண்டாம்
இதுபற்றி சோசியல் மீடியாவில் கூறிய அவர், கடந்த 6 மாதமாக உங்கள் ஆசியுடன் கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்துள்ளேன். எனக்கு ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதாக உணர்ந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இந்தத் தொற்றை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்ற அவர் அதற்காக சிகிச்சை பெற்றார்.

திடீர் பக்கவாதம்
பின்னர் கொரோனாவில் இருந்து மீண்டார். இந்நிலையில், வீட்டில் இருந்த அவருக்கு கடந்த 10 ஆம் தேதி அவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பை விலே பார்லேயில் உள்ள ஹூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செயல் இழப்பு
அவருடைய வலது கை உட்பட ஒரு பக்கம் செயலிழந்து விட்டதாகவும் அவரால் பேச முடியவில்லை என்றும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இருப்பதாகவும் அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இதை ஷிகாவின் பி.ஆர் மானேஜர் அஸ்வினி சுக்லாவும் உறுதிப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











