அப்பாவின் ஆசியால் 'விஜய்' அளவுக்கு பிரபலமாகிவிட்டேன்: பிக் பாஸ் பிரபலம் பெருமிதம்

By Siva

மும்பை: அப்பாவின் ஆசியால் தான் தளபதி விஜய் அளவுக்கு பிரபலமாக உள்ளதாக பிக் பாஸ் பிரபலம் ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 11வது சீசனில் வெற்றி பெற்றவர் ஷில்பா ஷிண்டே. இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமான அவர் பிக் பாஸ் மூலம் மேலும் பிரபலமாகிவிட்டார்.

ஷில்பா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

ஷில்பா

ஷில்பா

என் வீட்டில் தான் பிறந்தநாளை கொண்டாடுகிறேன். என் ரசிகர்கள் என்னை பார்க்க வேண்டும் என்றார்கள். அதனால் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளேன். மெழுகுவர்த்தி ஸ்டாண்ட், காலணிகள், மேக்கப் பொருட்கள் என்று ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் வந்து குவிந்துள்ளது. பரிசுப் பொருட்களை பிரித்துப் பார்க்கவே எனக்கு இந்த நாள் போதாது என்கிறார் ஷில்பா ஷிண்டே.

எடை பிரச்சனை

எடை பிரச்சனை

என் வேலையில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்துள்ளேன். தற்போது நான் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறேன். இடையில் கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருந்ததால் டயட்டை கைவிட்டேன். அதனால் வெயிட் போட்டுவிட்டது. வெயிட்டை குறைத்துவிட்டு பழையபடி நடிக்க வருவேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் ஷில்பா.

விஜய்

விஜய்

நான் தென்னிந்திய நடிகர் விஜய் அளவுக்கு பிரபலமானதை என்னால் நம்பவே முடியவில்லை. கடந்த ஓராண்டாக என் ரசிகர்கள் காட்டும் அன்பை பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறேன். எனக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் உண்டு. ஆனால் தற்போது அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு அதிகரிக்துவிட்டது. எல்லாம் என் அப்பாவின் ஆசி. சொர்க்கத்தில் இருந்து ஆசிர்வதிக்கிறார் என்று ஷில்பா தெரிவித்துள்ளார். விஜய், ஷில்பா ஆகியோரின் பெயர் கொண்ட ஹேஷ்டேக் அதிக அளவில் ட்விட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இந்திய பிரபலங்களின் பெயர் கொண்ட ஹேஷ்டேக் என்றால் அது விஜய், ஷில்பா தான்.

சினிமா

சினிமா

ஷில்பாவுக்கு மராத்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இனி டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள், சீரியல்களில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளார் ஷில்பா. காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்க விரும்புகிறார். காமெடி தனக்கு பரிட்சயமானது என்பதால் நடுவராக விரும்புகிறாராம் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X