»   »  பிளேரை சந்தித்த ஷில்பா

பிளேரை சந்தித்த ஷில்பா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக் பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடியுள்ள நடிகை ஷில்பா ஷெட்டி இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரை சந்தித்துப் பேசினார்.


லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி நிறுவனம் நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சைக்கு இடையே வெற்றி வாகை சூடினார் ஷில்பா ஷெட்டி. இந்த நிலையில்இங்கிலாந்து எம்.பியும், இந்தியருமான கீத் வாஸின் ஏற்பாட்டின் பே>ல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஷில்பாவுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

இதில் ஷில்பா பங்கேற்றார். அப்போது இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரை அவர் சந்தித்துப் பேசினார். இனவெறி சர்ச்சையின்போது அதற்கு எதிராக குரல்கொடுத்ததற்கா பிளேருக்கு ஷில்பா நன்றி தெரிவித்துக் கொண்டார்.


இந்த சந்திப்பின்போது நடிகை ஜேட் கூடியின் செயலுக்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பிளேரும் கூறினார்.

இங்கிலாந்து நாடாளுமன்றம் அளித்த இந்த கெளரவத்தை தனது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்றும் பிளேரிடம் ஷில்பா தெரிவித்தார்.

Read more about: shilpa meets blair

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil