ஷில்பா-ரீமா: பிடிவாரண்ட் ரத்து

By Staff

நடிகைகள் ரீமா சென், ஷில்பா ஷெட்டி ஆகியோர் மீதான பிடிவாரண்ட்டை மதுரைஉயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்துள்ளது.

முன்னணி மாலை நாளிதழின் மதுரை பதிப்பில் நடிகைகள் ரீமா சென், ஷில்பா ஷெட்டிஆகியோரது கவர்ச்சிப் படங்கள் பிரசுரிக்கப்பட்டன.

இதையடுத்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இரு நடிகைகள் மற்றும்பத்திரிக்கை ஆசிரியர் ஆகியோர் மீது மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் பொது நலவழக்கைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு கூறி இரு நடிகைகளுக்கும் தொடர்ந்துசம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இருவரும் ஆஜராகாமல் இருந்து வந்தனர்.இதையடுத்து இருவரையும் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கூறி பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கையும், தங்கள் மீது பிறப்பிக்கப்பட்டபிடிவாரண்ட்டையும் ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ரீமாசென்னும், ஷில்பா ஷெட்டியும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகைகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமன் வாதிடுகையில்,விளம்பரம் பெறும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவேவழக்கையும், பிடிவாரண்ட்டையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார்.

அதன் பின்னர் இரு நடிகைகள் மீதான பிடிவாரண்ட்டை ரத்து செய்வதாக நீதிபதிஅறிவித்தார். மேலும், வழக்கை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரணைக்குஏற்பதாகவும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X