ஒரு கோடிக்கு டீலிங் பேசி ஓகே பண்ண அந்த நடிகை.. இப்போ என்னலாம் பண்ண ஆரம்பிச்சுருக்காங்க தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் எதிர்பார்க்கப்படும் இளம் ஹீரோயின் போட்டியாளராக நடிகை ஷில்பா மஞ்சுநாத் பெயர் அடிபடுகிறது.
Recommended Video
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இவர் ஒரு கோடி ரூபாய் கேட்டதாகவும், அதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் நிர்வாகமும் ஓகே சொல்லி விட்டதாகவும் தகவல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்களை கவரும் பணியில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் சமீப காலமாக தீவிர ஆர்வம் காட்டி வருகிறாராம்.

ஷில்பா மஞ்சுநாத்
பெங்களூரை சேர்ந்த நடிகை ஷில்பா மஞ்சுநாத், முன்கரு மேல் 2 படத்தின் மூலம் கன்னட சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பிறகு ரோசாப்பூ எனும் மலையாள படத்தில் நடித்து அங்கேயும் தனது கால் தடத்தை பதித்தார். அடுத்ததாக விஜய் ஆண்டனியின் காளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவருக்கு இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மிகப்பெரிஅய் வெற்றியை தந்தது.

தென்னிந்திய மொழிகளில்
2016ம் ஆண்டு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த நடிகை ஷில்பா மஞ்சுநாத், ரவுண்டு கட்டி கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் மற்றும் பேரழகி ஐ.எஸ்.ஓ ஆகிய இரு தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

அழகிப் பட்டம்
இன்ஜினியரிங் படிச்சுட்டு சினிமாவுக்கு இயக்குநர்கள் தான் வரணுமா? ஹீரோயின்கள் வரக் கூடாதா? என்கிற ரீதியில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்று இருந்தாலும், மாடலிங் துறையில் இவருக்கு இருந்த அதீத ஆர்வமே இவரை ஹீரோயினாக்கியது. கடந்த 2013ல் மிஸ் கர்நாடகா அழகிப் பட்டத்தை தட்டிச் சென்ற அழகியும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்
இந்நிலையில், ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் கலந்து கொள்ளப் போகும் இளம் நடிகை இவர் தானாம். சுனைனா, பிகில் அம்ரிதா உள்ளிட்ட நடிகைகள் கைவசம் படங்கள் இருப்பதால், இந்த நிகழ்ச்சியில் சிக்காமல் எஸ்கேப் ஆன நிலையில், நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஒரு கோடி ரூபாய் சம்பளத்துடன் கலந்து கொள்ள ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

வேலை ஆரம்பம்
நடிகைகள் கிரண், பூனம் பஜ்வா, ஷிவானி உள்ளிட்டோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தினமும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வைரலாகி வரும் நிலையில், நாமும் அந்த வேலையை செய்ய வேண்டும் என்று தற்போது களத்தில் இறங்கி உள்ளாராம் நடிகை ஷில்பா. அவரது இன்ஸ்டா பக்கத்தை பின் தொடரும் ரசிகர்களும் அதிகரித்து வரும் நிலையில், ஏகப்பட்ட கவர்ச்சி விருந்தை கொடுக்க தயாராகி வருகிறார்.


Click it and Unblock the Notifications











