அழகே பொறாமைப்படும் பேரழகி இந்த இதயராணி... கவிதைகளை சிதறவிடும் ரசிகர்கள்!
சென்னை : இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.
கன்னடத்தில் சில படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் ஷில்பா இப்பொழுது தமிழில் தேவதாஸ் பிரதர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஷில்பா இப்பொழுது ட்ரெடிஷனல் லுக்கில் உள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகே பொறாமைப்படும் பேரழகி என தாறுமாறாக வர்ணித்து வருகின்றனர்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
கன்னட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவில் தஞ்சம் புகுந்துள்ள நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடித்த சில படங்களில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார். விஜய் ஆண்டனியின் காளி இவருக்கு அறிமுகப் படம் என்றாலும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் இவரை தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் அடைய செய்தது.

காதலர்கள் கொண்டாடும் வெற்றி
திகட்டாத காதல் படமாக இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் ஷில்பா மஞ்சுநாத் ரொமான்ஸ் நன்கு ஒர்க்கவுட் ஆகி இருக்க இப்போதுள்ள இளைஞர்களை வெகுவாக கவர்ந்து இந்த படம் காதலர்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்தது. இதற்குப் பிறகு ஷில்பா மஞ்சுநாத்-க்கு தமிழில் எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாகினர்.

தமிழில் தேவதாஸ் பிரதர்ஸ்
கன்னடத்தில் ரங்கா பிஇ,எம் டெக் என்ற படத்திலும் தமிழில் தேவதாஸ் பிரதர்ஸ் என்ற இளமை ததும்பும் படத்திலும் இப்போது நடித்துள்ளார். துருவா,அஜய் பிரசாத், பாலசரவணன் சஞ்சிதா ஷெட்டி என பலர் நடித்திருக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காதல் கலந்த காமெடி ஜானரில் உருவாகி உள்ளது. டீசர் வெளியாகி சக்கை போடு போட்டது.

பேரழகி இந்த இதயராணி
தேவதாஸ் பிரதர்ஸ் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் வேலையில் சமூக வலைதளங்களில் ஷில்பா மஞ்சுநாத் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை குளிர்ச்சி படுத்தி வர இப்பொழுது ட்ரெடிஷனலில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறார். நெருங்கிய நண்பரின் திருமணத்திற்கு சென்ற இடத்தில் எடுத்த இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகே பொறாமைப்படும் பேரழகி இந்த இதயராணி என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











