twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷில்பா ஷெட்டி மீது விமான சேவை நிறுவன அதிகாரி இனவெறி தாக்குதல்!

    ஷில்பா ஷெட்டி மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளது

    |

    மும்பை: சிட்னி விமான நிலையத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி மீது இன வெறி தாக்குதல் நடந்துள்ளது.

    ஷில்பா ஷெட்டி என்றாலே நமக்கெல்லாம் "மெல்லிசையே பாடலில் வெடுக் வெடுக் என்று அவர் பிரபுதேவாவுடன் ஆடும் நடனமும், கலர் கலராக மாறும் புடவையும் ஞாபகத்திற்கு வரும்.

    பாலிவுட்டில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த அவர், தற்போது ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக தரிசனம் தருகிறார்.

    மெல்போர்ன்

    மெல்போர்ன்

    நேற்று ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து மெல்போர்ன் செல்லும்போது ஷில்பா ஷெட்டிக்கு விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது. தன்னுடயைய லக்கேஜ்களுடன் விமான நிலையத்தில் செக் இன் செய்ய சென்றபோது, அளவுக்கு அதிகமான லக்கேஜ் வைத்துள்ளீர்கள் எனக் கூறி குவான்டாஸ் விமான சேவைப் பெண் அதிகாரி ஒருவர் அனுமதிக்க மறுத்துள்ளார். அதிக லக்கேஜ் பிரிவில் தான் செக் இன் செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளார்.

    அனுமதி மறுப்பு

    அனுமதி மறுப்பு

    பிசினெஸ் கிளாஸ் டிக்கெட்டில் செல்லும் அவருக்கு இரண்டு லக்கேஜ்களை கொண்டு செல்ல அனுமதி இருந்தும், சிறிய பேக் ஒன்றை கருத்தில் கொண்டு அது அளவுக்கு அதிகமான லக்கேஜ் எனக் கூறி, மாற்று கவுண்டருக்கு அனுப்பியுள்ளார். மற்றும் ஒரு பெண் வந்து கூறியும் அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் கடுமையாக ஆத்திரமடைந்துள்ளார் ஷில்பா.

    கால தாமதம்

    கால தாமதம்

    கடைசி நேரத்தில் வேறு வழியில்லாமல் அதிக லக்கேஜ் கவுண்டரில் செக் இன் செய்தேன். அப்போது அங்கிருந்த மற்றொரு பணியாளர், அதிக லக்கேஜ் பிரிவில் செக் இன் செய்யுமளவிற்கு லக்கேஜ் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

    ஆத்திரம்

    ஆத்திரம்

    நிற வேறுபாட்டால் என்னை செக் இன் செய்ய அனுமதிக்காததை குவான்டாஸ் ஏர்வேஸ் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அவர்களுடைய பணியாட்கள் உதவும் வகையில் பேசியிருக்க வேண்டுமே தவிர இப்படி நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி நடந்திருக்க கூடாது எனக் குறிப்பிட்டதோடு, இது அளவுக்கு அதிகமான லக்கேஜா என இன்ஸ்டாகிராம் நண்பர்களிடமும் கேட்டுள்ளார்.

    English summary
    Bollywood actress Shilpa Shetty faced a racist treatment by Qantas ground staff in Sydney.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X