உங்களோட ஹெல்த்தை முதல்ல நல்லா பாத்துக்கங்க... அப்பதான் மத்தவங்களை பாத்துக்க முடியும்

மும்பை : ஹெல்த்கேர், சமையல் என பல்வேறு தளங்களில் சிறப்பாக இயங்கிவருபவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி.

தொடர்ந்து அவர் தனது யூடியூப், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அது தொடர்பான பதிவிட்டுள்ளார்.

கட்டுக்கோப்பான ஷில்பா

கட்டுக்கோப்பான ஷில்பா

தன்னுடைய சினிமா கேரியரில் சிறப்பான பல படங்களில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. தமிழிலும் இவர் ஒரு படத்தில் நடித்துள்ளார். தற்போது 45 வயதாகும் ஷில்பா ஷெட்டி, இளம்வயது நாயகிகளுக்கு சவால்விடும் வகையில் தன்னுடைய உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொண்டுள்ளார்.

சமூகவலைதள பகிர்வு

சமூகவலைதள பகிர்வு

தொடர்ந்து யோகா செய்யும் வழக்கமுடைய ஷில்பா ஷெட்டி, அந்த பலனை பலரும் பெறும்வகையில், தன்னுடைய சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் பக்கங்களில் அதை வெளியிட்டு வருகிறார். இதன்மூலம் அதிகமானோர் பலனடைந்து வருகின்றனர். இதையடுத்து அவரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.

ஹெல்த்கேர் வீடியோக்கள் பகிர்வு

ஹெல்த்கேர் வீடியோக்கள் பகிர்வு

அவருடைய குடும்பத்தினருக்கு கொரோனா பாதித்த சூழலிலும் ஷில்பா, இத்தகைய ஹெல்த்கேர் வீடியோக்களை பகிர்வதை நிறுத்தவில்லை. மாறாக இந்த கொரோனா பாதிப்பு சூழலில், எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்தும் அவர் வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.

ஷில்பா அறிவுறுத்தல்

ஷில்பா அறிவுறுத்தல்

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமீபத்திய பகிர்வில் முதலில் நாம் நம்மை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் நமது அன்பிற்குரியவர்களின் நலனில் அக்கறை செலுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

எளிமையான பயிற்சி பகிர்வு

எளிமையான பயிற்சி பகிர்வு

நம்முடைய ஹெல்த், உணவு மற்றும் உறக்கம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தேவையான தண்ணீர் குடிப்பதையும் உறுதி செய்ய கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் எளிமையான ஒரு பயிற்சியையும் அவர் அந்த பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X