வாடகை தாய் மூலம் இரண்டாவது குழந்தை.. மீண்டும் அம்மாவான பிரபல நடிகை.. 5 ஆண்டுகள் முயற்சிக்கு வெற்றி!

சென்னை: வாடகை தாய் மூலம் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் பிரபல நடிகை.

நடிகை ஷில்பா ஷெட்டி, மாடலாக இருந்து திரைத்துறைக்கு அறிமுகமானவர். ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ள ஷில்பா ஷெட்டி, தமிழில் 1996ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் ரோமியா படத்தில் நடிகர் பிரபு தேவாவுடன் இணைந்து நடித்தார்.

இதன் மூலம் தமிழ்த்திரைத்துறைக்கு அறிமுகமானார் ஷில்பா ஷெட்டி. அதனை தொடர்ந்து குஷி படத்தில் மேக்கரீனா என்ற பாடலுக்கு நடிகர் விஜயுடன் இணைந்து நடனமாடினார்.

பிக்பிரதர்

பிக்பிரதர்

தொடர்ந்து பாலிவுட் படங்களில் பிஸியாக இருந்த ஷில்பா ஷெட்டி 2007ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் இனவெறி தாக்குதலுக்கு ஆளானதன் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

இந்த பிக்பிரதர் நிகழ்ச்சியை தழுவிதான் நம்ம ஊர் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 2009ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார் ஷில்பா ஷெட்டி. இவர்களுக்கு 2012 ஆம் ஆண்டு வியான் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

5 ஆண்டுகள் முயற்சி

5 ஆண்டுகள் முயற்சி

மகனுக்கு தற்போது 8 வயதாகியுள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இரண்டாவது குழந்தைக்கு முயற்சித்தனர். இந்நிலையில் வாடகை தாய் மூலம் இரண்டாவது குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் ஷில்பா ஷெட்டி. கடந்த 15ஆம் தேதி பிறந்த இந்த பெண் குழந்தைக்கு சமிஷா ஷெட்டி குந்த்ரா என பெயரிட்டுள்ளனர்.

வேலைகள் ஓவர்

வேலைகள் ஓவர்

மகா சிவன் ராத்திரியை தேர்வு செய்து குழந்தை பிறந்திருப்பதாக ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் கூறியிருக்கின்றனர். குழந்தை ஃபிப்ரவரி மாதம் பிறக்கும் என தேதி கொடுக்கப்பட்டிருந்ததால் தானும் தனது கணவரும் இந்த மாதம் இருந்த அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு காத்திருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார் ஷில்பா ஷெட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X