என் கணவர் எடுத்தது எல்லாமே அந்த படங்கள் தான்.. ஆபாச படங்கள் இல்லை.. ஷில்பா ஷெட்டி புது உருட்டு!

மும்பை: தனது கணவர் ஆபாச படங்களை தயாரிக்கவில்லை என்று நடிகை ஷில்பா ஷெட்டி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆபாச படங்கள் தயாரித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், எரோடிகா எனும் காம படங்களுக்கும் ஆபாச படங்களுக்கும் வித்தியாசம் உள்ளதாக நடிகை ஷில்பா ஷெட்டி நேற்று அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

48 டிபிக்கு ஆபாச படங்கள்

48 டிபிக்கு ஆபாச படங்கள்

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் நிறுவனத்தில் இருந்து சுமார் 48 டிபிக்கு ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கைது செய்யப்பட்ட அவர் வரும் ஜூலை 27ம் தேதி வரை போலீசார் கஸ்டடியில் விசாரணை செய்யப்பட உள்ளார்.

லண்டனை சேர்ந்த உறவினர்

லண்டனை சேர்ந்த உறவினர்

தயாரிப்பாளர் ராஜ் குந்த்ராவின் மைத்துனர் பிரதீப் பாக்‌ஷிக்கு ஹாட்ஸ்பாட் எனும் ஆபாச ஆப்பில் தொடர்பு இருப்பதாகவும் அவரையும் இந்த வழக்கில் விசாரிக்க போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை

ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை

கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட நிலையில், நடிகையும் மனைவியுமான ஷில்பா ஷெட்டிக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்றும் அவருக்கு இந்த விவகாரம் தெரியுமா? என்கிற கோணத்திலும் நேற்று மாலை மும்பை போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்தினர்.

எனக்கு தெரியாது

எனக்கு தெரியாது

ராஜ் குந்த்ரா அப்பாவி என்பது மட்டும் தனக்கு தெரியும் என்றும், அவருக்கும் ஆபாச பட விவகாரத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும், ஆபாச படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நடிகை ஷில்பா ஷெட்டி வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அது எரோடிகா

அது எரோடிகா

மேலும், எரோடிகா எனும் காமப் படங்களுக்கும் போர்ன் எனும் ஆபாச படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றும் நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ராஜ் குந்த்ரா தயாரிப்பில் நடித்த கந்திபாத் நடிகை கெஹனா வசிஸ்த்தும் இதே வாதத்தையே முன் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

7 கோடி பறிமுதல்

7 கோடி பறிமுதல்

வெளி நாடுகளுக்கு இப்படி ஏகப்பட்ட ஆபாச படங்களை தயாரித்து விற்றதன் மூலம் ராஜ் குந்த்ராவின் யெஸ் பேங்க் கணக்கிற்கு யுனைடெட் பேங்க் ஆஃப் ஆப்பிரிக்கா வங்கி கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 7.5 கோடி ரூபாயை இதுவரை போலீசார் கைப்பற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்பு இருக்கா

தொடர்பு இருக்கா

கணவர் அப்பாவி என்றும் அவர் ஆபாச படங்களை தயாரிக்கவில்லை. அவை எரோடிகா படங்கள் என்றும் வாதிடுவதால் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்தில் தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X