கொரோனா எல்லாம் எங்க லவ்வை தடுக்க முடியாது... கொரோனாவிற்கு சவால் விட்ட ஷில்பா

மும்பை : பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி யூடியூப் மற்றும் பல்வேறு விஷயங்களில் தன்னை மிகவும் பரபரப்பாக வைத்துக் கொண்டுள்ளார்.

அவரது கணவர் ராஜ் குந்த்ராவிற்கு கொரோனா பாதித்துள்ளது. அவர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஷில்பா ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.

பரபரப்பான ஷில்பா

பரபரப்பான ஷில்பா

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தன்னுடைய சினிமா கேரியரிலும் பின்பு படங்கள் குறைந்த போதும் தன்னை எப்போதும் பரபரப்பாகவும் தன்னுடைய சூழலை கலகலப்பாக வைத்துக் கொள்பவர். அவரின் யூடியூப் சேனல் அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளது. அதில் யோகா, சமையல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து வருகிறார்.

அறிவித்த ஷில்பா

அறிவித்த ஷில்பா

மேலும் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என அவர் எப்போதும் தன்னை பரபரப்பாக வைத்து கொள்கிறார். ரசிகர்களுடன் தொடர்ந்து டச்சில் இருந்து வருகிறார். படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி தனது கணவர் ராஜ் குந்த்ராவிற்கு கொரோனா பாதித்ததை ஷில்பா ஷெட்டி பகிர்ந்து கொண்டார்.

தனிமைப்படுத்திய குடும்பத்தினர்

தனிமைப்படுத்திய குடும்பத்தினர்

தொடர்ந்து தனது மாமனார், மாமியார், தாய், குழந்தைகள் அனைவருக்கும் கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டதையும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவர்கள் ஆலோசனையின் படி தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதையும் அவர் கூறினார்.

ராஜ் குந்த்ரா குவாரன்டைன்

ராஜ் குந்த்ரா குவாரன்டைன்

ஆனால் ஷில்பா ஷெட்டிக்கு மட்டும் நெகட்டிவ் ரிசல்ட் வந்த நிலையில், இந்த நெருக்கடியான நேரத்தில் சமூக வலைதள பதிவுகளில் இருந்து அவர் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டார். இந்நிலையில் ராஜ் குந்த்ராவின் குவாரன்டைன் முடிவடையும் நிலையில் உள்ளதாக தற்போது அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காதல்

கொரோனா காதல்

இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி கதவிற்கு இருபுறம் அவர்கள் இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தும்வகையில் உள்ளது. மேலும் கொரோனா நேரத்தில் காதல் என்றும் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷன் வெளியிட்டுள்ளார் ஷில்பா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X