ஷில்பா ஷெட்டியின் பிட்னஸ் ரகசியம்... யோகாசனம் செய்து வீடியோ வெளியிட்ட நடிகை
மும்பை : நடிகை ஷில்பா ஷெட்டி யோகாசனம் மற்றும் டயட் உள்ளிட்டவற்றால் தன்னை பிட்டாக வைத்து வருகிறார்.
மேலும் தனது யூடியூப் சேனல் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலும் அதை வெளியிட்டு வரவேற்பை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தற்போது மந்துகாசனத்தை செய்து அதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிட்னசுடன் உள்ள ஷில்பா
நடிகை ஷில்பா ஷெட்டிக்கு 45 வயது ஆகிறது. ஆயினும் தொடர்ந்த யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகளால் அவர் தன்னுடைய உடலை பிட்டாக வைத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து பாலிவுட்டில் படங்களில் நடித்து வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையிலும் ஹீரோயினுக்கான உடல் வாகுடன் அவர் உள்ளார்.
Recommended Video

பிட்னஸ் வீடியோக்கள்
தொடர்ந்து அவர் யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். பல்வேறு சமையல் வீடியோக்கள் மற்றும் பிட்னஸ் சம்பந்தமான வீடியோக்களை தொடர்ந்து இவைகளில் பதிவிட்டு வருகிறார். அவ்வப்போது தன்னுடைய குடும்பத்தினர் குறித்த பதிவுகளில் பகிர்ந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் பதிவு
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகாசன வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அதில் மந்துகாசனத்தை அவர் செய்துள்ளார். தவளை போன்ற தோற்றத்தை தரும் இந்த ஆசனம் இடுப்பு, தொடை மற்றும் வயிற்றின் அதிகமான தசைகளை குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு மில்லியன் பார்வைகள்
முதலில் ஆழ்ந்த மூச்சை எடுத்து பின்பு தரையில் தலையை வைக்கும்போது மூச்சை வெளிவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொப்புளின் மையத்திற்கு சிறப்பான பயிற்சியாக இந்த ஆசனம் அமையும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த வீடியோ வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஒரு மில்லியன் வியூக்களை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











